அரசின் சேவைகள் மக்களை சென்றடைய வேண்டும்: முதல்வர்
அரசின் சேவைகள் விரைந்து மக்களை சென்ற டைய வேண்டும். பொருளாதார குற்றங்களால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் எனவும் மோசடி நிறுவனங்களால் மக்கள் ஏமாறுவதை தடுக்க அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் உங்கள் தொகு தியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் டிஜிபி பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடி
சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் எம்.ரவி. இவர், தமிழக காவல்துறையில் டிஜிபி ஆக இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஃபேஸ்புக்கில் ரவியின் புகைப்படத்தை வைத்து அவரது பெயரிலே போலியான கணக்கை உருவாக்கி ஒருவரிடம் இருந்து பர்னிச்சர் பொருள்களை வாங்கி உள்ளனர். அதை பணம் கொடுத்து வாங்குமாறு ரவிக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி, உடனடியாக இதுகுறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
‘வந்தே பாரத்’ தொடக்க விழா: ரூ.2.6 கோடி செலவு
தமிழ்நாடு, கேரளாவில் 2 வந்தே பாரத் ரயில்கள் தொடக்க விழாவுக்காக ரூ.2.6 கோடி செலவு செய்துள்ளது. வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவுக்காக ரூ.2.6 கோடி செலவிடப்பட்டதாக ஆர்.டி.ஐ. மூலம் எழுப்பபட்ட கேள்விக்கு தெற்கு ரயில்வே பதிலளித்துள்ளது.
ஜூலை 17 முதல்வர் பெங்களூரு பயணம்
சென்னை, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. இதை தொடர்ந்து எதிர்கட்சிகளின் 2-ஆவது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18- ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 17 அன்று பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்: ப.சிதம்பரம் பாராட்டு
அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு இணையாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்துள்ள முதலமைச்சருக்கு, ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று முதல்வர் திறந்து வைக்க உள்ள நிலையில், ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கலைஞரின் இளகிய பணியை போற்றுவதற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை விட சிறந்த சின்னம் இருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்க!
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை நிரந்த ரமாக ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்து வத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திர நாத் தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவர்கள் மத்தியில் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு நிலவி யுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ஒன்றிய அரசு நடவடிக்கை வேண்டும்’
விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்து கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிப்போடும் தக்காளி விலை, கியாஸ் விலை யை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல் ஒன்றிய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள், இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நட வடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முகவரி துறை: முதல்வர் ஆய்வு
முதல்வரின் முகவரித் துறையில் பொது மக்களிடமி ருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நட வடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப்பய ணங்களின் போது பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். முதல்வ ரின் முகவரித் துறை மூலமாக பெறப்பட்ட 3.42 லட்சம் மனுக்க ளில் 2.94 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது 86% மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குலசேகரபுரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குலசேகரபுரத்தில் ஜூலை 6 அன்று நடந்த பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த ரகு (45), அவரது உற வினர் முகேஷ் (22) ஆகிய 2 பேரும் மதுரை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
டபுள் டக்கர் எக்ஸ்பிரஸில் கிளம்பிய புகை
சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் குடியாத்தம் அருகே சென்ற போது ரயிலின் எஸ் 6 (S 6) பெட்டியின் சக்கரங்களுக்கிடையே புகை கிளம்பியது. ரயில் ஓட்டுநருக்கும் தகவல் தெரிவிக்கப்பட குடியாத்தம் - ஆம்புர் ஆகிய பகுதிகளுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது. தீ அணைப்பான்கள் மூலம் புகையை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தலைமை செயலாளர் ஆளுநருடன் சந்திப்பு
சென்னை,ஜூலை 13- தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். 2021-இல் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு புதிய தலைமைச் செயலராக நியமிக்கப் பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பணி யாற்றிய நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி அவர் ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய தலைமைச் செயலராக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனாவை நியமித்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டார். இதன்படி கடந்த ஜூன் 30 ஆம் தேதி மாலை புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வியாழனன்று (ஜூலை 13) ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார்.