states

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு: காணாமல் போன ஆவண நகல்கள்

விழுப்புரம், செப்.6- பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் மாயமான ஆவணங்களின் நகல்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத் ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவர் மீதும் விழுப்பு ரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம்  19ஆம் தேதி வழக்கு விசாரணையில் அரசு சாட்சிகள் விசாரணை முடிந்த  பின்னர் நீதிபதி புஷ்ப ராணி, வழக்கின் முக்கிய ஆவணங்களை எடுத்து வர நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அச்சமயம் முக்கிய கோப்புகள் காணவில்லை என நீதிமன்ற ஊழியர்கள் பதில் அளித் துள்ளனர். இதனையடுத்து கோப்பு களை உடனடியாக கண்டுபிடிக்கும்படி நீதிபதி ஆணையிட்டார். பலமுறை தேடியும் கோப்புகள் கிடைக்காததால் நீதிமன்ற ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னர் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் சிபிசிஐடி வசம் உள்ள நகல் கோப்புகளை அடுத்து விசாரணையில் சமர்ப்பிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தர விட்டிருந்தார்.இந்நிலையில் வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. அதில் காணாமல் போன முக்கிய ஆவ ணங்களின் நகல்களை சிபிசிஐடி காவல்துறை நீதிபதி புஷ்ப ராணி முன்னர் சமர்ப்பித்தனர்.  இதையடுத்து விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

;