states

பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 22 துவக்கம்

சென்னை,ஜூலை 13- பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங் கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படு கின்றன. இந்த கல்வி ஆண்டில் 446  கல்லூரிகளிலுள்ள 1.54 லட்சம் இடங்க ளுக்கு 2.29 லட்சம் மாணவர்கள்  விண்ணப்பித்தனர்.இதில் 1,78,959  பேர் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றனர்.  இந்நிலையில், இந்த கல்வியாண் டுக்கான பொறியியல் கலந்தாய்வுக் கான அட்டவணையை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வியாழ னன்று வெளியிட்டார். இதன்படி, பொறி யியல் கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.  ஜூலை 28 ஆம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதியி லிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை  முதல் சுற்று கலந்தாய்வும், ஆகஸ்ட் 9 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 2ம் சுற்று கலந்தாய்வும் நடைபெறுகிறது.

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் 3 சுற்று  கலந்தாய்வு முடிந்த பிறகு காலி யிடங்கள் இருக்கும் பட்சத்தில் சிறப்பு  கலந்தாய்வு நடைபெறும். வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப் படும் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 11,804 பேருக்கு, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; 236 பேர் சென்ற ஆண்டை விட  இந்த ஆண்டு அதிகமாக உள்ளனர். பொறியியல் படிப்புகளில் காலியிடங் கள் இல்லாமல் அனைத்து இடங்களை யும் நிரப்புவதற்கான வழிமுறைகளை கையாள, முயற்சிகள் மேற்கொள்ளப் படும். ECE Advanced Technology, ECE Design and Technology ஆகிய 2 புதிய  படிப்புகள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு கல்லூரி யில் சேர்ந்துவிட்டு வேறு படிப்புக்கு கல்லூரி மாறினால் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும். வரும் 21 ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த  கூட்டத்தில் பல்கலைக்கழக பாடத் திட்டம் தொடர்பாக துணைவேந் தர்களுடன் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.