states

மாற்றுத்திறனாளிகள் மானிய கோரிக்கை: ஏமாற்றமளிக்கும் அறிவிப்புகள்!

சென்னை, ஜூன்  22- லட்சக்கணக்கான பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் உரிய வேலை, வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத் திற்கு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற னர். அண்டை மாநிலங்களான தெலுங் கானாவில் மாத உதவித்தொகை 40% ஊனம் இருந்தால் அனைவருக்கும் ரூபாய் 4,016/- மாதந்தோறும் வழங்கப் பட்டு வருகிறது.   ஆந்திராவில் ரூபாய் 3,000 ஆக இருந்து வந்த உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி ரூபாய் 6,000/- ஆக வழங்க புதிதாக பொறுப்பேற்றுள்ள தெலுங்கு தேச கட்சி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆந்திராவை ஒப்பிடும்போது தமி ழகத்தில் மிகப் பெரும்பாலான மாற்றுத் திறனாளிகளுக்கு கால் பங்கு தொகை மட்டுமே. அதாவது ரூபாய் 1,500 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மன வளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட ஐந்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ரூபாய் 2,000 வழங்கப்படுகிறது.  தமிழகத்தில் மாற்றுத்திறனாளிக ளுக்கான இந்த உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூபாய் 5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; முதுகு தண்டுவடம்,  தசைச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி அடுத்தவர் உதவி இல்லாமல் வாழ முடியாத மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூபாய் 8000 ஆகவும் உதவித்தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ் நாடு அனைத்து வகை மாற்றத் திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கம் - ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது.  ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இணையாக குறைந்தபட்சமாவது இந்த உதவி தொ கைகளை தமிழக அரசு உயர்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியிடும் எனக் காத்திருந்த லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்றைய (வெள்ளிக்கிழமை) மானிய கோரிக்கை  மீதான விவாதமும், புதிய அறிவிப்புக ளும் எங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இல்லை. மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. அதேபோன்று மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் உத்தரவு.. கிராமப்புற ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு மகாத் மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் முழுமையாக வேலை வழங்குவதை உத்தரவாதம் செய்வது.. விண்ணப்பிக் கிற அனைவருக்கும் உதவி உபகரணங் கள் தடையில்லாமல் கிடைக்க செய்வது. மன வளர்ச்சி குன்றிய, செவித்திறன், பார் வைத் திறன் பாதித்த மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் அடிப் படை ஆரம்பக் கல்வி மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளை உத்தரவாதப்படுத்துவது உள்ளிட்ட ஏழை எளிய லட்சக்கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிக ளுக்கு அடிப்படை வாழ்வாதாரக் கல்வி  மறுவாழ்வு பிரச்சனைகளில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாமல்  இருந்து வருவது மிகுந்த ஏமாற்றத்தை யும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது என்பதை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.  மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி ஆகியோரின் அறிக்கை.