states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தலைவர் பதவிக்கு திக்விஜய் சிங், சசிதரூர் போட்டி?

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசிதரூர், வெள்ளிக்கிழமையன்று (செப்.30) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இந்நிலையில், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்கும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவரும் வெள்ளி யன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். மல்லிகார் ஜூன கார்கேவும் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்வாங்குவதாக  அசோக் கெலாட் அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவது இல்லை  என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரி வித்துள்ளார். தில்லியில் வியாழனன்று சோனியா காந்தியை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்ட கெலாட், ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடியால் தான் வருத்தம் அடைந்ததாகவும், சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வராக தொடர்வீர்களா? என்ற கேள்விக்கு “இதுபற்றி சோனியா காந்தி முடிவு செய்வார்” என்றும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் : மாயாவதி தயாராம்!

“மாயாவதியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால் அவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார்” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தரம்வீர் சவுத்ரி கூறியுள்ளார். “எதிர்க் கட்சிகள் மரியாதைக்குரிய விதமாக எங்கள் கட்சி யை அணுகி அவர்களுடைய செயல் திட்டங்களை மாயாவதியிடம் தெரிவித்தால் கூட்டணி வைப்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக-வை நாங்கள் தோற்கடிப்போம் : அகிலேஷ்

“இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி கடுமையாக உழைத்தது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் (பாஜக) ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்தி, அரசு நிர்வாக எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். அதனால் சமாஜ்வாதி வெற்றி பெறவில்லை. என்றாலும் கூட பாஜக-வுடன் போட்டியிட்டு அவர்களை தோற்கடிக்கக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்கள் என்றால் அவர்கள் சமாஜ்வாதி கள்தான்” என்று உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் கூறியுள்ளார்.

மோடியே நினைத்தாலும் என்னை வீழ்த்த முடியாது!

மோடியே நினைத்தாலும் என்னை அரசியலில் இருந்து வீழ்த்த முடி யாது என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்ச ரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான பங்கஜா முண்டே பேசியுள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி குடும்ப அரசியலுக்கு முடிவுகட்ட விரும்புகிறார். நானும் குடும்ப அரசியலின் அடையாளம்தான். ஆனால் உங்கள் (மக்கள்) இதயங்களில் நான் ஆட்சி செய்வதால், பிரதமர் நரேந்திர மோடி கூட என்னை வீழ்த்த முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

அங்கிதா குறித்து அவதூறு

உத்தரகண்ட் பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா, தனது ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா  பண்டாரி என்ற 19 வயது இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு  சித்ரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தார். இந்நிலையில், “அங்கிதாவின் மரணத்திற்கு அவரைப் பெற்ற தந்தைதான் காரணம். பசியுடன் இருந்த பூனைகளுக்கு முன்பு  பாலை வைத்த அங்கிதாவின் தந்தைதான்  மிகப்பெரிய குற்றவாளி” என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் விபின் கர்ன்வால் பதிவிட்டிருந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்.2 மனிதச் சங்கிலியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் பங்கேற்பு 

சென்னை,செப்.29- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: சமீப காலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி கலவரத்தை உருவாக்க முற்படுகிறவர்களுக்கு எதிராக மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அக்டோபர் 2 அன்று மாநிலந்தழுவிய அளவில் நடைபெறும் மனிதச்  சங்கிலி இயக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கரம் கோர்ப்போம். தமிழகத்தில் சாதி, மதத்தின்  பெயரால் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி ஏற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதலை  கண்காணிக்க  சிறப்பு அதிகாரிகள்

சென்னை,செப்.29- டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதி காரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடை பெறும் நெல் கொள்முதலை கண் காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடலூருக்கு ராஜா ராமன், தஞ்சாவூருக்கு சிவஞானம், திருவள்ளூருக்கு கற்பகம், திரு நெல்வேலிக்கு சங்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகளை நிய மித்து அரசு அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

மலைப்பகுதி மாணவர்களுக்கு  கம்பளிச்சட்டை 

சென்னை, செப்.29- தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளி களில் பயிலும் மாணவர்கள் தடையின்றி கல்வி பயில ஏதுவாக சீருடை,  புத்தகப்பை, காலுறை, கம்பளிச் சட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வரு கிறது. அந்தவகையில் மாநிலம் முழுவதும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில் (2023-2024 )  1.17 லட்சம் கம்பளிச் சட்டைகள் (ஸ்வெட்டர்கள்) தைத்து வழங்குவதற் கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் கோரி உள்ளது. அதேபோல் அடுத்த கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 71.61 லட்சம் காலுறைகள் (சாக்ஸ்) வழங்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உறுப்புகள் தானம்

வேலூர்,செப்.29- வேலூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கி யுள்ளனர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத் தூரை அடுத்த சின்னம்பள்ளி குப்பத்தை சேர்ந்த தையல் தொழி லாளி சதீஷ் - நந்தினி தம்பதியின் இளைய மகன் துர்கபிரசாந்த் (13).   இம் மாதம் 25 ஆம் தேதி கோவி லுக்கு சென்று மிதிவண்டியில் வீடு திரும்பும் போது அடையாளம் தெரி யாத இருசக்கர வாகனம் மோதிய தாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காய மடைந்த சிறுவன் துர்காபிரசாத்தை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நிலையில், மூளைச்சாவு அடைந் தார். இதனையடுத்து அவரது பெற்றோரின் அனுமதியோடு சிறு வனின் கல்லீரல், ஒரு சிறுநீரகம்  சென்னை எம்.ஜிஎம் மருத்து வமனைக்கும், மற்றொரு சிறுநீரகம்  சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனைக்கும் தானமாக வழங்கப் பட்டுள்ளது.

போலி பத்திரப்பதிவு ஒழிப்பு சட்டம்: வைகோ வரவேற்பு

சென்னை, செப்.29- போலி பத்திரப் பதிவு ஒழிப்பு சட்டத்தை வைகோ வரவேற்றுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப்பதிவு செய்து வருவது தொடர்ந்து கொண்டிருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி போலி ஆவணம், ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவுத்துறையே ரத்து செய்யும்  அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்ட முன்வரைவுக்கு கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல்  அளித்தவுடன், சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளர்களால் புகார் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து, பதிவு செய்யப்பட்ட பத்திரம் போலியானது என்று  கண்டறிந்தால், அதை ரத்து செய்ய மாவட்டப் பதிவாள ருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. போலிப் பத்திரப் பதிவால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்ட தற்கான ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உரிமையாளர்களிடம் வழங்கியிருப்பதை வரவேற்கி றேன். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

குளிர்காலத்தில் நடுங்கவிருக்கும் பிரிட்டன் எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்

லண்டன், செப்.29- மாத ஊதியத்தில் வாழ்க்கை நடத்து பவர்களுக்கு பெரும் நெருக்கடியை எரி பொருள் விலையுயர்வு ஏற்படுத்தியுள்ள தாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குளிர்காலம் நெருங்குவதால் எரிபொருள் தேவை பெரிய அளவில் அதிகரிக்கப் போகிறது. பற்றாக்குறையும் இதுவரையில் காணாத அளவில் இருக்கும் என்று ஸ்காட்லாந்தின் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவைச் சேர்ந்த சீன் ஃபீல்டு எச்சரிக்கிறார்.  நல உதவிகளில் சமாளிப்பவர்கள் மற்றும் மாத ஊதியத்தைப் பெறுபவர்கள் ஆகியோரால் விலையுயர்வை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இது மேலும் முற்றப் போகிறது என்று ஆய்வுக்குழு கூறியுள்ளது. ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவைத் தான் ஐரோப்பிய நாடுகள் நம்பியிருக் கின்றன. இதில் பிரிட்டனும் விதிவிலக் கில்லை. ஒரு நாட்டில் மட்டும் நெருக்கடி என்றால் தப்பித்துக் கொள்ள வாய்ப்புள் ளது. அனைத்து ஐரோப்பிய நாடுகளும் நெருக்கடியில் சிக்கியிருப்பதால், குளிர்காலத்தில் நடுங்கியவாறே நேர த்தைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று ஸ்காட் லாந்து ஆய்வுக்குழு எச்சரிக்கிறது. பழங்காலத்தில் கையாண்ட பழக்கங் களுக்கு மக்கள் மாறுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மீண்டும் மரங்களை வெட்டி, மரக்கட்டைகளுக்கு நெருப்பு வைத்து பயன்படுத்தத் தொடங்கியுள்ள னர். ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் நெருப்புக்காக மரக் கட்டைகளைப் பயன்படுத்துவது பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. சூட்டிற் காக இயற்கை எரிவாயுவைத்தான் பிரிட்ட னில் உள்ள பெருவாரியான மக்கள் பயன்படுத்துகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, பெரும் சவா லான குளிர்காலத்தை அந்நாட்டு மக்க ளுக்கு அளிக்கப் போகிறது.
 

;