சென்னை, நவ.10- தமிழக-கேரள இருமாநில பொது எல்லையில் எவ்வித மான டிஜிட்டல் நில அளவை பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு-கேரள மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநில அளவை பணியை நவம்பர் 1 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளது. இது குறித்து ஏற்கெனவே வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள். இருப்பினும், மீண்டும் இது பற்றி இந்த விளக்கம் அளிக்கப்படு கிறது. கேரளா மாநிலம் தொடுபுழா மறு நில அளவை அலுவலக உதவி இயக்குநர், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமைந்துள்ள கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன் சோலை வட்டத்தை சேர்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை ஆகிய கிராமங்களில் டிஜிட்டல் நில அளவை பணிகள் முதற்கட்ட மாக மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. அந்த கிராமங்களின் இரு மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமைந்துள் ளதால் அது தொடர்பான பழைய பதிவேடுகளிலுள்ள அளவுகளை சரிபார்க்கும் கூட்டம் நடத்துவதற்கு தேனி மாவட்டம் நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், மாநில எல்லைகள் தொடர்புடைய பதிவேடுகளை தயார் நிலை யில் வைத்துக் கொண்டு கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவ தற்கு தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த விவரப்படி தொடர் புடைய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு தேதியை முடிவு செய்து தகவலை கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக் குநருக்கு கடித வரைவு மூலம் தெரிவிக்கவும், அந்த கூட்டு ஆலோ சனை கூட்டத்தில் கலந்து கொள்வ தற்கும் மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும். மேலும், இது தொடர்பாக தமிழக-கேரள இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நிலஅளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளார். எனினும், தமிழக வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நிலஅளவை தொடர்பான பணிகள் மேற்கொள் ளப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.