states

தேசாபிமானி மேலும் உயரத்தை நோக்கி

கடந்த செப்டம் 6 அன்று தேசாபிமானி தனது 80வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. 1942 செப்டம் 6ஆம் தேதி கோழிக்கோட்டில் இருந்து வார இதழாக தேசாபிமானி வெளிவரத் துவங்கியது.  1946 ஜனவரி 18ஆம் தேதி தினசரி பத்திரிகையாக வெளியானது. இன்று 10 பதிப்புகளுடன் கேரளத்தின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றாக தேசாபிமானி வளர்ந்து நிற்கிறது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் பிரசுரிக்கப்பட்ட ’பிரபாதம்’தான் தேசாபிமானியின் முன்னோடி. 1935ல் ஷொர்னூரிலிருந்தும், பின்பு 1938ல் கோழிக்கோட்டிலிருந்தும் வெளிவந்தது. விவசாயிகள், தொழிலாளர்கள், சமூகத்தில் ஆதரவற்றவர்கள் ஆகியோரின் குரலாக ஒரு புதிய பாதைக்கு வழிவகுத்தது ‘பிரபாதம்’. தேசாபிமானி கடந்து வந்த பாதைகள் பட்டுக்கம்பளம் விரித்தவையாக இருக்கவில்லை. மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து முன்னோக்கிச் சென்றதனால் தடைகள் மற்றும் அபராதம் சுமத்துதல் ஆகியவற்றைத் தொடர்ந்து சந்திக்க நேர்ந்தது

. மக்களின் உறுதியான ஆதரவால் இவற்றையெல்லாம் கடந்துசெல்ல முடிந்தது. அவசரநிலை காலத்தில் அரசின் வேட்டையாடலிலிருந்து மீண்டெழுந்தது. அவசரநிலைக் காலத்தில் மறைக்கப்பட்ட தொடர் அக்கிரமங்களை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தது தேசாபிமானி. நவீன கேரளத்தை வடிவமைப்பதற்காக அடித்தளமிட்ட அனைத்து முன்னேற்றங்களிலும் தேசாபிமானியின் பங்களிப்பு இருந்துள்ளது.

மக்களின் விருப்பங்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை என்பது பத்திரிகை உலகிலும் தொடர்ந்து நடைபெற்றது. அத்தகையத் தருணங்களில் தேசாபிமானி தனியாக நின்று போராடியது. ஜனநாயகம், மதச்சார்பின்மை மாண்புகளைப் பாதுகாக்கும் தனது நிலைபாட்டில் உறுதியாக நின்றது தேசாபிமானி. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. உலகமயமாக்கலால் தேசத்திற்கு விளையும் துயரங்களைக் குறித்து விரிவாக எடுத்துரைக்க மலையாளத்தில் தேசாபிமானி மட்டுமே தயாராக இருந்தது. இன்றும் அந்தப் போராட்டம் தொடர்கிறது. தேசிய சுதந்திரப் போராட்ட இயக்கம் முன்வைத்ததும், அரசியல் அமைப்பு ஏற்றுக் கொண்டதுமான அடிப்படை மாண்புகளைப் பாதுகாப்பதற்கு இன்றும் சமரசமில்லாத தலையீடுகளை நடத்துகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேச நிலைபாட்டை உயர்த்திப் பிடிப்பதிலும் சமரசமில்லை. பெரும்பாலான ஊடகங்கள் புறந்தள்ளும் வஞ்சிக்கப்பட்ட பிரிவினரின் குரலாக மாறவும் முடிந்தது.  ஊடகங்களின் ஜனநாயக உரிமைகளைத் தட்டிப்பறிக்கும் சூழல்தான் இன்றுள்ளது. தவறான புரிதலுடன்கூடிய விபரங்கள் மற்றும் பொய்யான செய்திகளையும் உண்மையைப் போல் விவரிக்கப்படுகிறது. இந்துத்துவா கார்பரேட் பெரும்பான்மை அதிகாரம்படைத்த அரசுக்கு ஆதரவாக செய்திகளை அவிழ்த்துவிடும் காலமாகும் இது. இந்துத்துவா அரசியலையும் அதன் அலைகளில் உருவெடுக்கும் சிறுபான்மை மதவாதச் சிந்தனைகளையும் அம்பலப்படுத்துகிற வலுவான நிலைபாட்டை தேசாபிமானி உயர்த்திப் பிடிக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆதரவான சமரசமற்ற நிலைபாடாகும் இது. மக்கள் நலன்சார்ந்த நிலைபாட்டை எடுப்பவர்களைச் சுற்றிவளைத்துத் தாக்குவதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்படு கடந்த செப்டம் 6 அன்று தேசாபிமானி தனது 80வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. 1942 செப்டம் 6ஆம் தேதி கோழிக்கோட்டில் இருந்து வார இதழாக தேசாபிமானி வெளிவரத் துவங்கியது.  1946 ஜனவரி 18ஆம் தேதி தினசரி பத்திரிகையாக வெளியானது. இன்று 10 பதிப்புகளுடன் கேரளத்தின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றாக தேசாபிமானி வளர்ந்து நிற்கிறது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் பிரசுரிக்கப்பட்ட ’பிரபாதம்’தான் தேசாபிமானியின் முன்னோடி. 1935ல் ஷொர்னூரிலிருந்தும், பின்பு 1938ல் கோழிக்கோட்டிலிருந்தும் வெளிவந்தது. விவசாயிகள், தொழிலாளர்கள், சமூகத்தில் ஆதரவற்றவர்கள் ஆகியோரின் குரலாக ஒரு புதிய பாதைக்கு வழிவகுத்தது ‘பிரபாதம்’. தேசாபிமானி கடந்து வந்த பாதைகள் பட்டுக்கம்பளம் விரித்தவையாக இருக்கவில்லை. மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து முன்னோக்கிச் சென்றதனால் தடைகள் மற்றும் அபராதம் சுமத்துதல் ஆகியவற்றைத் தொடர்ந்து சந்திக்க நேர்ந்தது. மக்களின் உறுதியான ஆதரவால் இவற்றையெல்லாம் கடந்துசெல்ல முடிந்தது. அவசரநிலை காலத்தில் அரசின் வேட்டையாடலிலிருந்து மீண்டெழுந்தது. அவசரநிலைக் காலத்தில் மறைக்கப்பட்ட தொடர் அக்கிரமங்களை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தது தேசாபிமானி. நவீன கேரளத்தை வடிவமைப்பதற்காக அடித்தளமிட்ட அனைத்து முன்னேற்றங்களிலும் தேசாபிமானியின் பங்களிப்பு இருந்துள்ளது.

மக்களின் விருப்பங்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை என்பது பத்திரிகை உலகிலும் தொடர்ந்து நடைபெற்றது. அத்தகையத் தருணங்களில் தேசாபிமானி தனியாக நின்று போராடியது. ஜனநாயகம், மதச்சார்பின்மை மாண்புகளைப் பாதுகாக்கும் தனது நிலைபாட்டில் உறுதியாக நின்றது தேசாபிமானி. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. உலகமயமாக்கலால் தேசத்திற்கு விளையும் துயரங்களைக் குறித்து விரிவாக எடுத்துரைக்க மலையாளத்தில் தேசாபிமானி மட்டுமே தயாராக இருந்தது. இன்றும் அந்தப் போராட்டம் தொடர்கிறது. தேசிய சுதந்திரப் போராட்ட இயக்கம் முன்வைத்ததும், அரசியல் அமைப்பு ஏற்றுக் கொண்டதுமான அடிப்படை மாண்புகளைப் பாதுகாப்பதற்கு இன்றும் சமரசமில்லாத தலையீடுகளை நடத்துகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேச நிலைபாட்டை உயர்த்திப் பிடிப்பதிலும் சமரசமில்லை. பெரும்பாலான ஊடகங்கள் புறந்தள்ளும் வஞ்சிக்கப்பட்ட பிரிவினரின் குரலாக மாறவும் முடிந்தது.  ஊடகங்களின் ஜனநாயக உரிமைகளைத் தட்டிப்பறிக்கும் சூழல்தான் இன்றுள்ளது. தவறான புரிதலுடன்கூடிய விபரங்கள் மற்றும் பொய்யான செய்திகளையும் உண்மையைப் போல் விவரிக்கப்படுகிறது. இந்துத்துவா கார்பரேட் பெரும்பான்மை அதிகாரம்படைத்த அரசுக்கு ஆதரவாக செய்திகளை அவிழ்த்துவிடும் காலமாகும் இது. இந்துத்துவா அரசியலையும் அதன் அலைகளில் உருவெடுக்கும் சிறுபான்மை மதவாதச் சிந்தனைகளையும் அம்பலப்படுத்துகிற வலுவான நிலைபாட்டை தேசாபிமானி உயர்த்திப் பிடிக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆதரவான சமரசமற்ற நிலைபாடாகும் இது. மக்கள் நலன்சார்ந்த நிலைபாட்டை எடுப்பவர்களைச் சுற்றிவளைத்துத் தாக்குவதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

இடதுசாரிகள் குறிப்பாக சிபிஐ(எம்), மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கின்ற இடது ஜனநாயக முன்னணி அரசு ஆகியவற்றிற்கு எதிராக நடைபெறும் பிரச்சார புரட்டுகள் இதன் ஒரு பகுதியாகும். ’தேசாபிமானி’யை அதன் இன்றைய நிலைக்கு உயர்த்துவதற்கு பாடுபட்டவர்கள் ஏராளமுண்டு. அவர்களின் தியாகப்பூர்வமான அர்ப்பணிப்புடன் கூடிய படைப்புதான் தேசாபிமானி. அவர்களின் மகத்தான பங்களிப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்ட மக்கள் நல அரசியல் பதாகையை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எங்களை வழிநடத்துகிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நவீன ஊடகங்களின் வளர்ச்சியையும் உட்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியதும் மிக முக்கியமானதாகும். ஒரு பத்திரிகை நிறுவனம் என்ற நிலையில் மாறிவரும் மக்களின் விருப்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அதனடிப்படையில் செயல்படுவதற்கான உத்திரவாதமும் ஏற்கவேண்டியுள்ளது. கட்சி பத்திரிகை என்ற நிலையில் சிபிஐ(எம்)-ன் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதும் பொய்ப்பிரச்சாரங்களை அம்பலப்படுத்துவதும் மிக முக்கியமானதாகும். அத்துடன் உலகின் அத்தனை அசைவுகளையும் அறிமுகப்படுத்துகிற நிகழ்காலப் பத்திரிகையாக மேலும் முன்னேறுவதற்கான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை இத்தருணத்தில் பத்திரிக்கையை நேசித்து வளர்த்தெடுத்த மக்களிடம் கூறிக்கொள்கிறது தேசாபிமானி. புத்தலத்து தினேசன் முதன்மை ஆசிரியர்  தமிழாக்கம் மு.சங்கரநயினார் கின்றன. இடதுசாரிகள் குறிப்பாக சிபிஐ(எம்), மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கின்ற இடது ஜனநாயக முன்னணி அரசு ஆகியவற்றிற்கு எதிராக நடைபெறும் பிரச்சார புரட்டுகள் இதன் ஒரு பகுதியாகும். ’தேசாபிமானி’யை அதன் இன்றைய நிலைக்கு உயர்த்துவதற்கு பாடுபட்டவர்கள் ஏராளமுண்டு.

அவர்களின் தியாகப்பூர்வமான அர்ப்பணிப்புடன் கூடிய படைப்புதான் தேசாபிமானி. அவர்களின் மகத்தான பங்களிப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்ட மக்கள் நல அரசியல் பதாகையை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எங்களை வழிநடத்துகிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நவீன ஊடகங்களின் வளர்ச்சியையும் உட்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியதும் மிக முக்கியமானதாகும். ஒரு பத்திரிகை நிறுவனம் என்ற நிலையில் மாறிவரும் மக்களின் விருப்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அதனடிப்படையில் செயல்படுவதற்கான உத்திரவாதமும் ஏற்கவேண்டியுள்ளது. கட்சி பத்திரிகை என்ற நிலையில் சிபிஐ(எம்)-ன் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதும் பொய்ப்பிரச்சாரங்களை அம்பலப்படுத்துவதும் மிக முக்கியமானதாகும். அத்துடன் உலகின் அத்தனை அசைவுகளையும் அறிமுகப்படுத்துகிற நிகழ்காலப் பத்திரிகையாக மேலும் முன்னேறுவதற்கான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை இத்தருணத்தில் பத்திரிக்கையை நேசித்து வளர்த்தெடுத்த மக்களிடம் கூறிக்கொள்கிறது தேசாபிமானி. புத்தலத்து தினேசன் முதன்மை ஆசிரியர்  தமிழாக்கம் மு.சங்கரநயினார்

;