states

இந்தித் திணிப்பில் இருந்து ஒன்றிய அரசு உடனடியாக பின்வாங்க வேண்டும்

திருவனந்தபுரம், அக்.15- இந்தி மொழியை திணித்து நாட்டின்  ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கை யில் இருந்து ஒன்றிய அரசு உடனடி யாக விலக வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநி லக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தி, இந்து, இந்துஸ்தான் என்ற  நோக்கத்தை செயல்படுத்தும் சங்பரி வாரத்தின் முயற்சி, நாட்டை மொழிப்  போருக்கு இட்டுச் செல்லும் சூழ்நிலை யை உருவாக்குகிறது. ஒன்றிய அரசில் வேலை பெறுவதற்கும், கல்வி பெறு வதற்கும் இந்திப் புலமையைக் கட்டா யமாக்குவது இளைஞர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள் ளது. நாட்டின் பன்முகத்தன்மையை மதிக்கும் கொள்கையை நாம் கடைப் பிடிக்காவிட்டால், அது தேசிய ஒரு மைப்பாட்டையே பாதிக்கும் என்பதை  நமது அண்டை நாடுகளான இலங்கை,  வங்கதேசம் போன்ற நாடுகளின் அனு பவம் காட்டுகிறது.  எனவே, தவறான மொழிக் கொள்  கையில் இருந்து ஒன்றிய அரசு உடனடி யாக விலக வேண்டும். வேலை வாய்ப் பில் மாநிலத்தின் ஏழ்மையான மக்க ளுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு  செயல்படுத்தி வருகிறது. இடதுசாரி களின் பலத்த அழுத்தத்தின் விளை வாக, முதல் ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்  தங்களை அகற்ற ஒன்றிய அரசு தற் போது முயற்சித்து வருகிறது. 

இதை எதிர்த்து, மாநிலத்தில் எழும் போராட்டங்களுக்கு, நாட்டை நேசிக்  கும் மக்கள், முழு ஆதரவு தர வேண்  டும். உலகமயமாக்கல் கொள்கை களால், துயரத்தில் உள்ள மக்களுக்கு, சிறு சிறு நிவாரணங்களைக் கூட, இல்  லாது செய்ய, ஒன்றிய அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் வழக்கு விசாரணை என்ற பெயரில் அமலாக்க இயக்குநர கம் (ஈ.டி) இடதுசாரி அரசை வேட்டை யாட வந்திருப்பது மாநில அரசை நிலை குலைய வைக்க யூடிஎப் மற்றும் பாஜக  தலையீட்டின் ஒரு பகுதியாகும். தாமஸ்  ஐசக்கிற்கு எதிரான சம்மனைத் தடுத்து நிறுத்தியது இந்த வகையான நட வடிக்கைக்கு கடுமையான பின்னடை வாகும். ஒன்றிய அரசின் அரசியல் நாட கங்களுக்கு இந்த நடவடிக்கை கடும் அடியாகும். கேரளாவின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சூனியக் கொலை, நமது சமூகத்தில் மறு மலர்ச்சிச் சிந்தனைகளைத் தீவிரமாகப் பரப்ப வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது. மூடநம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களுக்கு எதி ராக வலுவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மூடநம்பிக்கையைப் பரப்பி பொருளாதார, அரசியல் ஆதா யம் தேடும் சக்திகளை அம்பலப் படுத்த வேண்டும். அமைச்சர்களின் வெளிநாட்டுப் பய ணம் தொடர்பில் பல ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் பொய்யான செய்தி களை பரப்ப முயற்சிக்கின்றன. கேரளா வின் விரிவான வளர்ச்சிக்கு, பல்வேறு  நாடுகளுடன் கருத்துப் பரிமாற்றம் மற்றும் மூலதன முதலீட்டு வாய்ப்பு கள் குறித்து ஆராயப்பட வேண்டும். இது தொடர்பாக பல்வேறு வழிகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்  னும் மக்களிடம் கொண்டு செல்வ தற்குப் பதிலாக பொய்களைப் பரப்பும் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;