states

ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமிக்க தொடர்ந்து முயற்சி

கிருஷ்ணகிரி, ஏப். 18- சானமாவு கிராமத்தில்  அரசு கொடுத்த பட்டா நிலத்தின் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என்று  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி அருகே சான மாவு கிராமத்தில் 1999ஆம் ஆண்டு ஆதி திராவிடர் நலத் துறையால் 41 பயனாளி களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்க ப்பட்டது. ஏற்கனவே அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் அரசிடமிருந்து பட்டாக்கள் பெற்ற பயனாளிகள் பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தா ததால் 2016 ஜனவரியில் ஆதிதிராவிட மக்களுக்கும், அரசுக்கும் எதிராக தீர்ப்பு அமைந்தது. மேலும் மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்ததால் வழக்கு தொடுத்தவர்களின் வாரிசுகள் நிலத்தை குறுக்கு வழியில் ஆக்கி ரமிப்பு செய்ய தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் காரணமாக ஆதிதிராவிட நலத் துறை சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது..

வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில் 2019 அக்டோ பர் முதல் பல முறை நிலத்தை ஆக்கிர மிக்க முயற்சிப்பதும் அதற்கெதிராக போராட்டங்கள் நடத்தி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதும் தொடர்கிறது. கடந்த மார்ச் 27, 28இல் வழக்கு தொடுத்துள்ள கரிஎல்லப்பாவின் வாரிசுகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட போது காவல்துறை, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையினரிடம் புகார்  அளித்து ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்த ்ப்பட்டது.நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் கரிஎல்லப்பா வாரிசுகள்  12/2 சர்வே எண் நிலத்தை ஜனவரி 24ஆம் தேதியே வேறு ஒரு வருக்கு விற்பனை செய்ததும், கெல மங்கலம் பத்திரப் பதிவு அலுவல கத்தில் பதிவு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. நிலத்தை வாங்கியதாகக் கூறி ஒருவர் கடந்த 8, தேதிகளில்  கொம்பையா, கரிஎல்லப்பா வாரிசுகள், ராயக்கோட்டை நிலத்தரகர் ஈஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து ஜேசிபி இயந் திரம் மூலம் சமப்படுத்தி மீண்டும் ஆக்கி ரமிக்கும் பணியில் ஈடுபட்டனர். புகாரையடுத்து கிராம நிர்வாக அலுவ லரும், அதிகாரிகளும் தலையிட்டு ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 10.4..2022இல் உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடை பெற்றது. சூளகிரி வட்டாட்சியர், சார் ஆட்சியர் உதவியாளர், தேன்கனிக் கோட்டை காவல்துறை துணை கண்கா ணிப்பாளர், தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு நிலத்தை விற்றுள்ள கரிஎல்லப்பா வாரிசுகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் நாகேஷ்பாபு, துணைத்தலைவர் இருதயராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்..               அதில் 1999க்கு முன்பு நிலத்தை பயன்படுத்தி வந்த கரிஎல்லப்பாவின் வாரிசுகள் வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை நிலத்திற்குள் பிரவே சிக்கக் கூடாது என முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 41 பேருக்கு கொடுக்கப் பட்ட பட்டா இடத்திற்கு கல் நடப்படா மலும், வழக்கு குறித்து நிலத்தில் பெயர் பலகை வைக்கப்படாமலும் வழக்கம் போல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக 41 பட்டாக்க ளுக்கான நிலத்தை அளந்து கல் நட வேண்டும், வழக்கு குறித்து பெயர் பலகை வைக்க வேண்டும் என தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.