சென்னை, அக்.11- சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், மாநி லப் பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழக அரசுக்கு சொந்த மான அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரி யம், சிவில்சப்ளை கார்ப்ப ரேஷன், ஆவின், டாஸ்மாக் கூட்டுறவு சர்க்கரை ஆலை கள், கூட்டுறவு பஞ்சாலை கள் போன்ற பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர் களுக்கு 2021-2022 ஆம் ஆண் டிற்கான போனஸ் வழங்கக் கோரி சம்மந்தப்பட்ட நிறு வனங்களில் செயல்படக் கூடிய தொழிற்சங்கங்கள், நிர்வாகங்களிடம் கோரிக்கை அளித்துள்ளன. வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையாகும், தீபாவளி பண்டிகைக்கு 12 நாட்களே உள்ள நிலையில் இதுவரை எந்த நிர்வாகமும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசவில்லை. எனவே, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங் கள் உடனடியாக தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசி போனஸ் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் பல்வேறு தனியார் துறை நிறுவனங்க ளின் தொழிற்சங்கங்களும் போனஸ் கோரிக்கை அளித் துள்ளன. தொழிலாளர் துறை விரைந்து தலையிட்டு நிர்வாகங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி போனஸ் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமாய் தமிழக அர சையும், பொதுத்துறை நிறு வனங்களையும், தொழிலா ளர்துறையையும் சிஐடியு தமிழ்மாநிலக்குழு வலியு றுத்துகிறது. இவ்வாறு அதில் தெரி வித்துள்ளனர்.