states

img

சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு தாக்கல்

ஆந்திர மாநில முன்னாள் முதல் வரும், தெலுங்குதேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி ஊழல் வழக்கு தொடர் பாக கைது செய்யப்பட்டு, விஜய வாடாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமகேந்திர வர்மம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய சந்திரபாபு நாயுடுவின் மனுவை, விஜயவாடா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், தன் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதார மில்லை என்றும் ஜாமீன் கோரியும் இரண்டு மனுக்களை சந்திரபாபு நாயுடு வியாழனன்று விஜயவாடா நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். மனுவை ஏற்கவில்லை? ஆனால் மனுக்களுக்கு  குற்றப்புல னாய்வுத் துறை இன்னும்  பதிலளிக்க வில்லை என்பதால்  வெள்ளியன்று விஜய வாடா நீதிமன்றம் ஜாமீன் மனுக் களை விசாரணைக்கு ஏற்கவில்லை. வசதிகள் தாராளம் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் சந்திரபாபு நாயுடுவுக்கு அனைத்து வசதி களும் செய்து செய்துதரப்பட்டுள்ளது. ஏசி அறைகளுடன் படுக்கை வசதி, தனி  கழிப்பறை, நாளிதழ்கள், தொலைக் காட்சி, வீட்டு சாப்பாடு, தனிஉதவியா ளர் உள்ளிட்ட சகல வசதிகள் வழங்கப் பட்டுள்ளன.