திங்கள், செப்டம்பர் 27, 2021

states

img

புயலால் பாதித்த தமிழகம், புதுவைக்கு அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்யும்... டிவிட்டரில் உள்துறை அமைச்சர் தகவல்

புதுதில்லி:
நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.நிவர் புயல்புதுச்சேரி அருகே புதனன்று இரவு கரையைகடந்தது. நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல குடியிருப்புகள் மழைநீரில் மூழ்கின. புதுச்சேரி யிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது.  இரு மாநிலத்திலும்தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்கழு வினர் மீட்புப் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில், நிவர் புயல் மீட்புப்பணி கள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், நிவர் புயலையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உடன் பேசியுள்ளேன். சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உறுதியாக செய்து தரும். தேவைப்படும் மக்களுக்கு உதவ ஏற்கனவே என்.டி.ஆர்.எஃப் குழுவினர் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

;