விஜயவாடா, நவ.4- ஆந்திராவில் விரிவான ஜாதி அடிப்படை யிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது. தலைமைச் செயலகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட் டத்துக்குத் தலைமை வகித்த முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒடுக்கப்பட்ட வகுப்பி னரின் வாழ்வு மேம்படவும், அவர் களின் சமூக அதிகாரத்தை அடுத்த கட்டத் திற்கு கொண்டு செல்லவும் உதவியாக இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், “சமூ கம், பொருளாதாரம், கல்வி சார்ந்த வேலை வாய்ப்பு, போன்ற பிரச்சனைகளின் அடிப்ப டையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இந்தக் கணக்கெடுப்பு, நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வரம்பைத் தாண்டியுள்ள மக்களை மதிப்பிட உதவும். வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றிக்கு கணக்கெடுப்புத் தரவு பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.