states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல இன்று முன்பதிவு துவக்கம்

சென்னை, செப். 11- 2023ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் பதிவு குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தொடங்கி பொங்கல் விடுமுறை நாட்களுக்கான முன்பதிவை செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையதளத்தில் செய்து கொள்ளலாம  என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை நாட்களின் போது முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று  தீர்ந்துவிடும். எனவே காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித் துள்ளது.

காரைக்காலில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

காரைக்கால், செப்.11- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழு வதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக் கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இன்று காலை 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அடக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்தவர் இமானுவேல்: மு.க.ஸ்டாலின்

சென்னை, செப். 11- தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்க ளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப் பகுதி களை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிறன்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக திங்களன்று (செப். 12) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்து டன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சண்முகம் மறைவு: டியுஜெ இரங்கல்

சென்னை, செப். 11- மூத்த ஊடகவியலாளர்  சண்முகம் மறைவிற்கு டியுஜெ  இரங்கல் தெரிவித்துள்ளது. சன் டி.வி., நியூஸ் 7 தமிழ்  தொலைக்காட்சிகளில் பணியாற்றிய மூத்த ஊடக வியலாளர் சண்முகம் (52) உடல்நல குறைவால் சனிக்கிழமை  (செப். 10) காலமானார். இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் செய்தி வாசிப்பாளர்களில் உச்சரிப்பில் தனித் தன்மை காட்டியவரும் தமிழ்ப் பற்றாளருமான சண்முகம் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவு ஊடக உலகிற்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கும் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நியூஸ்7 தமிழ் நிறுவனத்தார், அங்கு பணிபுரிந்த ஊடக விய லாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் டியுஜெ  தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. சண்முகம் மறைவால், பொருளாதாரத்தை இழந்து  வாடும் அவரது குடும்பத்தினருக்கு பணியின் போது மரண மடையும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும்  நிதியுதவியை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கேட்டுக் கொள்கி றோம். அதேபோல் நியூஸ் 7 நிர்வாகம் சண்முகம் குடும்பத் திற்கு சேர வேண்டிய, செட்டில்மெண்ட் தொகைகளை உடனே வழங்க  வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாவித்திரி கண்ணன் கைது

சென்னை, செப், 11- கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12ஆம்  வகுப்பு மாணவி மர்மமான  முறையில் உயிரிழந்தது குறித்து சமூக வலைத் தளங்களில் கருத்து பதி விட்டு வந்த மூத்த பத்திரி கையாளர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப் பட்டுள்ளார். அவரது கை துக்கு பல்வேறு அமைப்பின ரும், அரசியல் கட்சியின ரும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.

‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் மகாராஷ்டிரா மாணவி தற்கொலை!

மும்பை, செப். 10 - ‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண்களே எடுக்க முடிந்ததால், மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில், மகாராஷ்டிராவில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலாவைச் சேர்ந்தவர் ரோகிணி விலாஸ் தேஷ்முக். தனது மாமா வீட்டில் தங்கி, மருத்துவம் பயில்வதற்காக, கடந்த 2 ஆண்டுகளாக, ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். முதல் முயற்சியில் 350 மதிப்பெண்கள் வரை பெற்றவர், அண்மையில் வெளிவந்த ‘நீட்’ தேர்வு முடிவுகளில்  இரண்டாவது முயற்சியில் 420 மதிப்பெண்களை எடுத்துள் ளார்.  எனினும், மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு அவர் 565-க்கு மேல் மதிப்பெண்களை எதிர்பார்த்துள்ளார். ஆனால், அந்த மதிப்பெண் கிடைக்காததால், மிகுந்த விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையிலேயே  அகோலா நகரில் உள்ள மோர்னா  நதி பாலத்தில் இருந்து குதித்து தனது உயிரைவிட்டுள்ளார். ரோகிணிக்கு தன் தந்தையைப் போல மருத்துவராக வேண்டும் என்ற குடும்பக் கனவு இருந்தது. ஆனால் குடும்பத்தின் கனவை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை  என்று குடும்பத்தினர் தங்களின் வேதனையை வெளிப்படுத்தி யுள்ளனர்.

;