states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கருகும் ‘காக்கி டவுசர்’ : காங்கிரஸ் பதிலடி

ராகுல் காந்தி அணிந்திருந்த பர்பெர்ரி பிராண்ட்  டி சர்ட் விலை ரூ. 41,257 என புகைப்படத்துடன் டுவிட்டர் பதிவை வெளியிட்ட பாஜக, தொடர்ந்து இதுதொடர் பாக விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், காங்கிரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முன்பு அணிவகுப்புக்கு பயன்படுத்தி வந்த  காக்கி டவுசர் தீயில் கருகும் வகையில் ஒரு படத்தை பதி விட்டு, “இன்னும் 145 நாட்கள் உள்ளன” என்று ராகுல்  காந்தியின் பயணத்தை குறிப்பிட்டுள்ளது. “வெறுப்பிலிருந்து நாட்டை விடுவித்து, பாஜக - ஆர்எஸ்எஸ்-சால் ஏற்பட்ட பாதிப்புகளை களைவோம்; படிப்படியாக எங்கள் இலக்கை அடைவோம்” என்றும் குறிப்பிட்டு உள்ளது.

விலைவாசி பற்றி பாஜக பேச வேண்டும்!

“டீசர்ட் பற்றியும் அன்டராயர் பற்றியும் பேச நான் விரும்பவில்லை. ராகுல் காந்தி வாங்கிய  டீசர்ட் ரூ. 41 ஆயிரம் என விமர்சிப்பது சிறுபிள்ளைத்தன மாக இருக்கிறது. ராகுல் அணிந்துள்ள டீ சர்ட் என்ன  விலை; எங்கே வாங்கப்பட்டது என நான் சொன்னால் உங்களுக்கு சிரிப்புதான் வரும். இது பாரத் ஒற்றுமை யாத்திரை. இதில் பொருளாதார சமூக விவகாரங்களை பற்றி மட்டுமே பேச வேண்டும். பணவீக்கம்,விலைவாசி உயர்வு,  சமூக பிரச்சனைகளை பேச ஆளும் பாஜக அஞ்சுகிறது. ஆனால் பொய் மூட்டைகளை கட்டவிழ்க்கிறது” என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள் ளார்.

ராமர் கோயிலுக்கு ரூ. 1800 கோடி செலவு!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர்  கோயிலில், 2024 ஜனவரி மாதம் வரும் மகர சங்கராந்தி நாளில் குழந்தை ராமர் சிலை நிறுவப்படும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை முழுமையாகக்  கட்டி  முடிக்க ரூ. 1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 7 பேர் பலி!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.  இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம்  ஜலாவர் மற்றும் உதய்பூர் மாவட்டங்களில் ஞாயிறன்று ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

‘கர்த்தவ்ய பாத்’ புதிய பெயர்ப் பலகை

புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான சாலையின் பெயர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ‘கிங்ஸ் வே’ - அதாவது ‘ராஜபாதை’ என அழைக்கப்பட்டது. இது அண்மையில் மோடி அரசால் ‘கர்த்தவ்ய’ பாதை என பெயர் மாற்றப் பட்டது. இதையடுத்து, இந்தியா கேட்-டை சுற்றியுள்ள பகுதிகளில் பழைய பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டு, ‘கர்த்தவ்ய பாத்’ புதிய பெயர் பலகைகள் வைக்கப் பட்டுள்ளன.

எலி மருந்து  தனி நபர்களுக்கு விற்கக் கூடாது: தமிழக அரசு

சென்னை, செப். 12- எலி பேஸ்ட்டை தனி நபர்  வாங்க வந்தால், அவர்க ளுக்கு தரக் கூடாது என்று அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் அறிவுறுத்த ப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித்துள் ளார். உலக தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நல நல்லாதரவு மன்றம்  (மனம்) திட்டம் துவக்க விழா மற்றும் ஊடகவியலாளர்க ளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மனம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மனம் நல ஆலோசனை இன்றைய காலத்தில் மிகவும் அவசி யம்” என்றார்.

காஷ்மீருக்கான பிரிவு 370-ஐ மீட்டெடுப்போம்!

“ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது என்று எனக்கு நன்கு தெரியும் இந்த விவகாரத்தில் பொய் கூறி மக்களை முட்டாளாக்க நான் விரும்பவில்லை” என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்து இருந்தார். இந்நிலை யில், “குலாம் நபி ஆசாத் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து” எனவும், “ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற முடியும் என இங்குள்ளவர்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார்!

சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 15, 16 தேதிகளில் நடைபெறும், 22-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் செல்கிறார். உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதியின் அழைப் பின் பேரில் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடு களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
 


 

 

;