விழுப்புரம், ஜூலை.24- தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, திமுக எம்.பி.கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலிவரதனை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். திமுக அரசைக் கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், விக்கிரவாண்டி யில் பேசிய மாவட்டத் தலை வரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.ஏ.டி.கலிவரதன், “முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்து, திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனி மொழி ஆகியோர் குறித்து அவதூ றாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விக்கிர வாண்டி நகர திமுக துணைச் செயலாளர் சித்ரா, விக்கிர வாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் விநா யக முருகன், உதவி ஆய்வாளர் காத்தமுத்து ஆகியோர் வி.ஏ.டி. கலிவரதன் மீது வதந்திகளை பரப்புவது, கலகம் செய்வதற்கு தூண்டி விடுவது, ஆபாசமாக பேசுவது, அமைதியை சீர் குலைப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை (ஜூலை 24) அதிகாலை திருக் கோவிலூர் அருகே மணம்பூண்டி-தேவனூர் கூட்டுச்சாலையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற விக்கிரவாண்டி காவல்துறை யினர் அவரைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,அவரை விழுப்புரம் கிளை சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கெனவே பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு புகாரில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.