states

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட தடை

சென்னை, செப். 4- பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத் கார சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட் டவர்கள் மற்றும் சாட்சிகள் குறித்த செய்திகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளா ச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. இது குறித்து அனைத்து தரப்பு ஊடகங்களிலும் பல செய்திகள் வெளி யாகின. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சி களின் அடையாளங்களை மறைக் காமல், அப்படியே வெளிப்படுத்தி யதாக ஊடகங்கள் மீது குற்றம்சாட்டி சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டது. குறிப்பாக வாரம் இருமுறை வெளி யாகும் தனியார் பத்திரிக்கையில் பாதிக் கப்பட்டவர்களின் அடையாளங்கள் பொது வெளியில் பகிரங்கமாக அம்ப லப்படுத்தப்பட்டதாகவும் அந்த பிரதி களை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப் பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, குறிப்பிட்ட அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகி மக்களை சென்று விட்ட நிலையில், பிரதிகளை திரும்ப பெறுவது பயனற் றது என தெரிவித்துள்ளார். இருப்பி னும் இந்த வழக்கில் அந்த தனியார் பத்திரிகையை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, விசார ணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் குறித்த செய்திகளை வெளியிட தடை விதிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் அவரது உறவி னர்கள் ஆகியோரை பத்திரிகை அல்லது காட்சி ஊடகங்களில், முகம் மற்றும் அடையாளங்களை மறைத்து கூட செய்தி வெளியிட தடை விதிக்கப் பட்டுள்ளது இந்த உத்தரவை மீறும் ஊடகங் கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;