states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்விற்கான முடிவுகள் திங்களன்று மாலை 4 மணிக்கு https://cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப் படிப்பை முடித்து கல்லூரியைவிட்டு வெளியேறுகின்றனா். ஆனால், அதற்கேற்ப பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. புதிய முதலீடுகளை ஈா்த்து, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. நாட்டில் நிலவும் வேலையின்மை விகிதம் குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) அறிக்கை வெளியிட்டுள்ளது. 

நாட்டின் பணிவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்துக்கொண்டே செல்வதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.5 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சில்லரை பணவீக்கம் ஆகஸ்டில் 7 சதவீதம் ஆக அதிகரித்ததால் அதை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

;