சென்னை,அக்.21- தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து ள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தெற்கு மன்னார் வளைகுடா பகுதி யில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டி ருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மயிலாடுதுறை மாவட்டம், மானகிரி பகுதியைச் சேர்ந்த மீனவர் வீர வேல் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வரு கிறார். இந்திய கடற்படையினரின் இந்த கொடூரச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக்கண்டிக்கிறது. ஏற்கனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும், உடமை களை சேதப்படுத்துவதும் போன்ற கொடு மைகளை தொடர்ந்து அனுபவித்து வரும் நிலையில், தற்போது இந்திய கடற்படை யினரும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கொடூரத்தின் உச்சமாகும். எனவே, துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்திட வேண்டு மெனவும், படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வரும் தமிழக மீனவருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணத்தை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும். அதுபோல் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடு விக்கவும், அவர்களின் வாழ்வாதா ரத்திற்கு நிரந்தர தீர்வு காணவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.