states

பொது நுழைவுத் தேர்வு, இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஎம் கண்டனம்

சென்னை, அக்.16- நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்  கும் வகையில் பொதுநுழைவுத் தேர்வு, இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நட வடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் அக்டோ பர் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநி லச் செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்  தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு  உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப் பேற்ற பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்  பில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டுள்ளது.

இது  இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்ப தோடு ஒருமைப்பாட்டிற்கும் உலை வைப்ப தாக அமைந்துள்ளது. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வகைசெய்யும் முறையில் உரு வாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் அனைத்துப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே நடத் தப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடா ளுமன்ற நிலைக்குழு, குடியரசுத் தலைவரிடம் 112 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலான பரிந்துரைகள் இந்தி மொழி யை திணிக்கும் முயற்சியாகவே உள்ளது. குறிப்  பாக, ஒன்றிய கல்வி நிறுவனங்கள் அனைத்தி லும் இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும் என்றும், ஆங்கிலம் விருப்ப மொழி யாக மட்டுமே இருக்கும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்தி பேசாத மாநில மாணவர்களை ஒன்றிய அளவிலான கல்வி நிலையங்களிலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் முயற்சியே இது.

ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டை திணிக்கும் மோடி அரசு 

ஒன்றிய அரசின் விளம்பரங்கள் 50 விழுக்  காட்டிற்கு மேலாக இந்தியில் மட்டுமே இருக்கும். ஐ.நா.வுடனான தொடர்பு மொழியாக இந்தியே  இருக்கும் என்பன உள்ளிட்ட அனைத்து பரிந்து ரைகளும் இந்து - இந்தி - இந்துஸ்தான் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்பாட்டை திணிப்பதாகவே அமைந்துள்ளன. மோடி அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி, கேரளம், மேற்குவங்கம்,  தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களி லும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாஜக வின் ஒற்றை மொழித் திணிப்பை இந்தியா ஏற்காது என்பதையே இது காட்டுகிறது. மருத்துவத்திற்கான நீட் தேர்வை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் எதிர்த்து வரு கின்றன. இந்நிலையில் அனைத்து படிப்புகளுக் கும் பொதுநுழைவுத் தேர்வை புகுத்துவது என்பது அப்பட்டமான அநீதியாகும். சமீபத்தில் ஒன்றிய அமைச்சகங்கள், துறை கள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன  அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட துறை களில் 20 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப  ஒன்றிய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிசன் நிய மன அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இத்  தேர்வுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் விண்ணப்  பிக்கும் வாய்ப்புள்ளது. இத்தேர்விற்கான கேள்வித் தாள்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழி மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது. மாநில மொழிகளுக்கு இடமில்லை. இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரா னது மட்டுமின்றி, இந்தி பேசாத மாநிலங்க ளைச் சார்ந்த மாணவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.

போராட மக்களுக்கு அறைகூவல்

ஒன்றிய அரசின் இந்நடவடிக்கைகளை மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கி றது. மேலும்,

*     நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்  கும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.

 *     அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்ட வணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்  ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.

*     மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்பு களுக்கும் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்திட வேண்டும்.

*     ஒன்றிய அரசின் தேர்வாணையத்தின் கேள்வித் தாள்களில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்து கிறது.

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை களுக்கு எதிராக ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் போராட முன்வர வேண்டு மென வேண்டுகோள் விடுக்கிறது.