states

img

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோ மக்களுக்கு உதவிக்கரம்

அங்காரா,செப்.18- மொராக்கோ நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்  3000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.மேலும் 5000 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விட்டன .இந்த பேரிடரில் 6,125 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு உதவ மொராக்கோ-துருக்கி  நட்புறவு அமைப்பும்  அரபு சங்கமும் அம்மக்களுக்கு ஆதரவாக  தங்களது குழுவுடன் களத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . இதற்காக  துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் நிவாரண முகாம் துவங்கப்பட்டுள்ளது. இவ்வமைப்புகள்  இணைந்து  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான  உணவு முதல் சுகாதா ரப் பொருட்கள் வரை பலவிதமான நிவாரண பொருட்களை அனைத்துத்  தரப்பு மக்களிடம் இருந்தும்  சேகரித்துள்ளன. உதவி தேவைப்படுபவர்களுக்கு  உதவிக் கரம் நீட்ட  நாங்கள் முயற்சிக்கிறோம் என்றும்  நாம் ஒன்றாய்  மாறுவோம் என  மொராக்கோ-துருக்கி நட்பு அமைப்பின் தலைவர் அப்பாஸ் எஸ்-ஜைம் நமது அரபு சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும், அரபு மக்களுடன் நல்லுறவை கட்ட மைக்க  முயற்சிக்க வேண்டும் என அந்நிகழ்ச்சி யில் பங்கேற்ற அரபு சங்கத்தின் தலைவர் மெடின் டுரான் ஆகியோரும் கூறியுள்ளனர்.

;