- பூமியிலிருந்து 9,000 ஒளி ஆண்டுகள் தொலை வில் உள்ள சூப்பர்நோவாவின் புகைப்படத்தை வெளியிட்டது நாசா விண்வெளி ஆய்வு மையம்.
- மருது பாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிரன்று (அக்., 23) முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 144 தடை விதித்து மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவு
- முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் (இந்திய வம்சாவளி) பொருளாதார அனு பவம் வாய்ந்த தனித்துவமான வேட்பாளர். அவரையே பிரதமர் பதவியில் அமர்த்த இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ஆதரவளித்துள்ளார். மேலும் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை டொமினிக் ராப் எதிர்த்துள்ளார்.
- ராஜஸ்தானில் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
உலகச் செய்திகள்
- அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் ஓஹூ துறைமுகப்பகுதியில் வசிக்கும் பிரியன் மற்றும் ஜேமி சிமிக் தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்தத் துறைமுகத்திற்கு வந்து செல்லும் போர்க்கப்பல்களில் இருக்கும் விமானங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருள் தங்கள் குடிநீரை மாசுபடுத்தி வருவதாகவும், தங்கள் குடும்பம் உடல் நலன் குன்றியதற்கு அந்த மாசுதான் காரணம் என்றும் தங்கள் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இரண்டு முறை எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் கசிவு இருந்ததாக அமெரிக்கக் கடற்படை ஒப்புக்கொண்டிருக்கிறது.
- பொருளாதாரம் பலவீனம் அடைந்துள்ளதால் வறுமைக் குறைப்பின் வேகம் சரிந்துள்ளதாக தாய்லாந்து பற்றிய தனது அறிக்கையில் உலக வங்கி கூறியுள்ளது. 1990களில் மிக வேகமாகக் குறைந்து வந்த வறுமையின் விகிதம் 2020 ஆம் ஆண்டில் வேகம் குறைந்தது. கிழக்கு ஆசிய நாடுகளில் அசமத்துவம் அதிகமாக நிலவும் நாடான தாய்லாந்தில், கிராமப் பகுதிகளில் நிலவும் வறுமை அதிகரித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் அளவை அதிகப்படுத்திவிட்டது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
- கலகம் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள இப்ராகிம் டிராவ்ரே பர்கினோ ஃபாசோவின் இடைக்கால ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கிறார். அடுத்த கட்டங்களுக்கான புதிய வழிகாட்டி வழிமுறைகளை அவர் வெளியிட்டார். தனது அரசில் ஒரு பிரதமர் உள்ளிட்ட 25 அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தை விரைவில் அவர் அமைப்பார். 71 உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால நாடாளுமன்றமும் விரைவில் உருவாக்கப்படும்.