states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மியான்மரில் மேலும் 5 தமிழர்கள் தவிப்பு

மியான்மரில் மோசடி நிறுவனங்களின் பிடியில் கட்டாயப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு புதிய  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில்  இருந்து தாய்லாந்துக்கு தப்பி அங்கிருந்து இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உதவி யுடன் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் தாயகம் திரும்பிய பிறகு தெரிவித்த புகார்களால், மியான்மரில் உள்ள மோசடி நிறுவனங்கள் இந்தியர்களை வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிய வந்துள் ளது. இதன் காரணமாக, அங்கு மேலும் ஐந்து தமிழர்கள் தப்பி வர முடியாத நிலை யில் உள்ளனர். அங்கு சிக்கியுள்ள தமிழர்களில் மூன்று  பேர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் என்றும் திருவாரூர் மற்றும் கள்ளக் குறிச்சியைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த குழுவில்  மேலும் இருவர் உள்ளனர். அவர்கள் தெலுங்  கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு உயர்வு?

கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 சதவிகிதம், பட்டியல் வகுப்பினருக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 50 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்நிலையில், நீதியரசர் எச்.என். நாகமோகன் தாஸ் ஆணைய பரிந்துரையின்படி, பட்டியல் வகுப்பினர், பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள்  தொகை அடிப்படையில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்க முதல்வர்  பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட கர்நாடக அனைத்துக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முடிவின்படி, பட்டியல் வகுப்பினருக்கு 17 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7 சதவிகிதம் என இடஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்படவுள்ளது. வழங்கப்பட உள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்தை, அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் இணைக்கவும் தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

ராகுல் பிரச்சாரத்தில் லங்கேஷ் குடும்பத்தினர்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத்தில் தனது இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு வரும்  நிலையில், மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் வெள்ளியன்று ராகுல் காந்தியுடன் கைகோர்த்தனர். கவுரி லங்கேஷின் தாயார் இந்திரா லங்கேஷ், சகோதரி கவிதா லங்கேஷ் ஆகியோர் ராகுலுடன் நடை  பயணத்தில் கலந்து கொண்டதுடன், கவுரி லங்கேஷின் தாயார்  இந்திரா லங்கேஷ் ராகுலை கட்டியணைத்தும் தனது வாழ்த்துக் களை பகிர்ந்து கொண்டார்.

பிரஷாந்த் கிஷோர் பொய் சொல்கிறார்!

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர்,  சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், ஐக்கிய ஜனதா தளக்  கட்சியை வழிநடத்துமாறு நிதிஷ் குமார் தன்னிடம் கேட்டதாகவும், ஆனால், தான் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறி யிருந்தார். இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்  நிலையில், “கட்சியில் பதவி வழங்கியதாக, கட்சியை வழிநடத்தக் கேட்டதாக பிரசாந்த் கிஷோர் கூறியது பொய், அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “4-5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னை காங்கி ரஸுடன் இணையச் சொன்னார். ஆனால், இன்று அவர் பாஜக வுடன் கைகோர்த்து செயல்படுகிறார்” என்றும் சாடியுள்ளார்.

பவுத்தம் மாறிய தலித் மக்கள்; பாஜக ஆத்திரம்!

தில்லி ஜாண்டேவாலனில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவனில்  சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து மதத்தினர் புத்த  மதத்துக்கு மாறினர். இந்த நிகழ்ச்சியில் தில்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் கலந்துகொண்டு, உறுதி மொழி ஒன்றை வாசித்தார். “எனக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை நான் வழிபட மாட்டேன். கட வுளின் அவதாரமாக கூறப்படும் ராமர் மீதும், கிருஷ்ணர் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களையும் நான் வழிபட மாட்டேன். விஷ்ணுவின் அவதாரமே புத்தர் எனக் கூறப்படுவது பொய்ப் பிரச்சாரம்” என்று அந்த உறுதிமொழியில் ராஜேந்திர பால் கூறியிருந்தார். இதனை முன்வைத்து, ஆம் ஆத்மிக்கு எதிராகவும், அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமிற்கு எதிராகவும் பாஜகவினர் அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்து கிடையாது

சென்னை, அக். 8- சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி, தனது  சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால், வய தான காலத்தில் தங்களைக் கவனிக்காம லும், மருத்துவச் செலவுகளுக்கு உதவி  செய்யாமலும் இருந்ததால், சொத்துக் கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இதனை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்துப் பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா  விசாரித்தார். நகைகளை விற்றும், சேமிப்புகளைக்  கரைத்தும், தங்கள் மருத்துவச் செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என விமர்சித்த நீதிபதி, கடந்த 2007ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, கவனிக்காத குழந்தைகளுக்கு எழுதி வைத்த சொத்துக்களை  ரத்து செய்யப் பெற்றோ ருக்கு உரிமை உள்ளது என உத்தர விட்டுள்ளார்.

‘ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’:   133 பேர் கைது

சென்னை,அக்.8- தமிழ்நாட்டில் நடந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய  ரவுடிகள் பிடிபட்டுள்ளனர்.  இதுகுறித்து காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  கடந்த 24 மணி நேரத்தில் “மின்னல் ரவுடி வேட்டை” தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 133 முக்கிய ரவுடி கள் பிடிபட்டனர். கொலை, கொள்ளை வழக்குகளில் நிலுவையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ஏ பிளஸ் 13 ரவுடிகளும் சிக்கினர். இவர் கள் மீது பல கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகள் நிலுவை யில் உள்ளன. பிடிபட்ட மற்ற 105 பேரிடம்  விசாரணை நடந்து வருகிறது. “மின்னல் ரவுடி வேட்டை” தமிழகம்  முழுவதும் தொடர்ந்து நடைபெறு கிறது.  இவ்வாறு  சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.

சோழர் கால  சிலைகள் பறிமுதல்

சென்னை,அக்.8- கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனி யார் அருங்காட்சியகத்தில் முறையான  ஆவணங்கள் இல்லாமல், பழங்கால  சிலைகள் இருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,  தனிப்படை காவலர்கள் அந்த அருங்காட்சியகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், அங்கிருந்த பழங்கால வீணாதாரர் மற்றும் ரிஷபதாரர் ஆகிய 2 வெண்கலச் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டன. சோழர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, இரு சிலைகளையும்  பறிமுதல் செய்தனர். இவற்றின் துல்லி யமான மதிப்பு குறித்து நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டுள்ளனர். மேலும், இவை எந்தக் கோயிலில் இருந்து  திருடப்பட்டவை, தொடர்புடையவர்கள் யார் எனவும் விசாரிக்கின்றனர்.

ரயிலில் பட்டாசு: 3 ஆண்டு சிறை

சென்னை, அக். 8- தீபாவளிக்கு லட்சக் கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு யிலில் பயணம் செய்வார்கள். அப்படி செல்லும் போது,  பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட் டுள்ளது.  எளிதில் தீப்பிடிக் கக் கூடிய தன்மை உள்ள தால் விபத்துகள் ஏற்படா மல் இருக்க இந்த  நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மீறி எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது  1,000 ரூபாய் அபரா தம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெற்கு  ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குப் பின்னடைவு

வியன்னா, அக்.8- ரஷ்யாவின் எண்ணெய் விற்ப னையைக் கட்டுக்குள் கொண்டு வர விலைக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பும் (ஓபெக்), ரஷ்யாவும் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் தற்போது வெளியாகி யுள்ளன. நவம்பர் மாதம் முதல் ஒரு நாளைக்கு எண்ணெய் உற்பத்தியின் அளவை இருபது லட்சம் பீப்பாய் கள் என்பதோடு நிறுத்திக் கொள்ள இந்த நாடுகள் முடிவு செய்திருக் கின்றன. இந்த முடிவை அதிகாரப் பூர்வமாக அறிக்கை மூலம் தெரி வித்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில், “உலகப் பொருளாதார மற்றும் எண்ணெய் சந்தை குறித்து தெளிவான நிலை இல்லை. ஒரு நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதனால் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியி ருக்கிறார்கள். பெட்ரோலியம் ஏற்று மதி நாடுகளின் அமைப்பில் சவூதி அரேபியா, இராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், அங்கோலா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினராக அல்லாத ரஷ்யாவும் கூட்டத்தில் கலந்து கொண்டது. ஏப்ரல் 2020க்குப் பிறகு முதன் முறையாக இவ்வளவு பெரிய உற்பத்திக் குறைப்பு செய்யப்படு கிறது. அப்போது கொரோனா பெருந்தொற்றால் தேவை குறை யலாம் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தி குறைக்கப்பட்டது. தற்போது உலகப் பொருளாதாரம் நெருக்கடியான சூழலில் இருப்பதால் அந்த நட வடிக்கையை எடுக்கப்போவதாகச் சொல்கிறார்கள். ஓபெக், ரஷ்யாவை யும் இணைத்துக் கொண்டதால் அமெரிக்காவின் முயற்சி தோற்கும் சூழல் உருவாகியுள்ளது.