states

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 455 இடங்கள்

சென்னை,செப்.16- மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப்  பள்ளி மாணவர்களுக்கு 455 இடங்கள் கிடைக்கும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்  சிறப்பு மருத்துவமனையில், 2022-23  ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த  பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்புக ளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளி யிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், “தமிழ்நாட் டில் 121 அரசு கல்லூரிகளில் 2,526  இடங்களுக்கும், 348 சுயநிதிக் கல்லூரி களில் அரசு ஒதுக்கீடான 15,307 இடங்களுக்கான விண்ணப்பங்களும், சான்றும் பரிசீலனை செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டது”என்றார். துணை மருத்துவப் பட்டப்படிப்பு களுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப் பங்கள் (பொதுப் பிரிவு) 58,980 ஆகும்.  இதில் விண்ணப்பங்கள் 58,141 ஏற்றுக் கொள்ளப்பட்டது. மருந்தாளுநர் பட்டயப் படிப்புகளுக்கு (பொது பிரிவு) 5271 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது 5206. டிப்ளமோ செவிலியர் படிப்புக ளுக்கு (பொதுப் பிரிவு) 12,624 விண்ணப் பம் செய்திருந்தனர். இதில் 12,478 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. டிப்ளமோ ஆப்டோமெட்ரி படிப்பு களுக்கு வந்த விண்ணப்பங்கள் 1055. இவற்றில் 948 பேர் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  பாராமெடிக் கல் டிப்ளமோ மற்றும் சான்று படிப்புக ளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப் பங்கள் (பொதுப் பிரிவு) 7793 ஆகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப் பங்கள் 7540 என்றும் அவர் கூறினார். 2022-2023 ஆண்டிற்கான மொத்த மருத்துவப் படிப்பு இடங்கள் 8225. அதில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் இடங் கள் 455. பல் மருத்துவ படிப்பு இடங்கள்  2160, அதில் 7.5 விழுக்காடு இடஒதுக் கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள்  இடங்கள் 114 ஆகவும் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

;