மாஸ்கோ, அக்.10- கூடங்குளம் அணுமின்நிலை யத்தின் 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைக்கான, கண்காணிப்பு அமைப்புகளின் சோதனையை ரோசாட்டம் நிறைவு செய்தது. கூடங்குளம் அணுமின் நிலை யத்தின் 3ஆவது அணு உலைக்கான இன்-கோர் இன்ஸ்ட்ருமென்டேஷன் சிஸ்டம் (ஐசிஐஎஸ்) மற்றும் ஒருங்கி ணைந்த பகுப்பாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) ஆகியவற்றை ரோசாட்டம் ஆட்டோமேட்டட் கண்ட்ரோல் சிஸ்டம் ஜேஎஸ்சி (ரோசாட்டம் ஸ்டேட் கார்ப்பரேசனின் ஒரு நிறுவனமான ஆர்.ஏ.எஸ்.யு ஜேஎஸ்சி) நிறுவனம். இந்திய அணுமின் கழகத்தின் (என்பி சிஐஎல்) பிரதிநிதிகளுடன் இணைந்து சோதனை செய்தது. இதனுடன் 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலை களுக்கான தானியங்கி கசிவு கண்டறிதல் துணை அமைப்புகளின் சோதனையும் நிறைவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான ஏற்பு சோதனைகளும் விரிவான ஒருங்கிணைப்பு சோதனை களும் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆய்வு தளமான ஸ்பெஷலைஸ்டு சைன்டிஃபிக் ரிசர்ச் ஃபார் இன்ஸ்ட்ரு மென்டேஷன் இன்ஜினியரிங்கில் (எஸ்என்ஐஐபி ஜேஎஸ்சி, ஆர்ஏஎஸ்யு ஜேஎஸ்சி நிர்வாகத்தின் கீழ் ஒரு நிறுவனம்) மேற்கொள்ளப்பட்டது. முதலில் ஐசிஐஎஸ் மற்றும் எஸ்ஐஏ ஆகிய துணை அமைப்புகள் வெற்றி கரமாக சோதிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதற்கான உறுதிப் படுத்துதலை பெற்றன. இந்த அமைப்பு களில் உள்ள உபகரணங்கள் அணு உலையின் நிலை குறித்த தகவல்களை பெற்று பகுப்பாய்வு செய்து, அதனை முதன்மை கட்டுப்பாட்டு அறைக்கு (எம்சிஆர்) அனுப்பும். அதைத் தொடர்ந்து, கசிவு கண் காணிப்பு அமைப்புகள் (ஏஎல்எம்எஸ், ஏஎல்எம்எஸ்-2, எச்எல்எம்எஸ், எச்எல் எம்எஸ்-2, எச்எல்பிஎஸ்-2 பி மற்றும் எல்எம்எஸ் பிஎச்ஆர்எஸ் எச்(இ) இந்திய அணுமின் கழகத்தின் பிரதிநிதி களுடன் இணைந்து சோதிக்கப் பட்டன.
இந்த சோதனைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தி ற்கு உபகரணங்கள் அனுப்பப்படும். இதுகுறித்து கூடங்குளம் அணு மின் நிலையத்தின் ஐ&சி திட்ட அலு வலக தலைவர் டிமிட்ரி குகுஷ்கின் கூறுகையில், இந்த துணை அமைப்பு கள் அனைத்தும், அணு உலை கண்கா ணிப்பு, கட்டுப்பாடு மற்றும் பரிசோதனை அமைப்பான எம்சிடிஎஸ் இன் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். அவை, அணு உலையின் கண்கா ணிப்பு மற்றும் கட்டுப்பாட்டை வெவ்வேறு இயக்க முறைகளில் உறுதி செய்கின்றன. மேலும் எதிர்கால மின் நிலை யத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வாடிக்கையாளரின் தேவை களை அறியக்கூடிய திட்ட வடிவ மைப்பையும் கொண்டுள்ளன. இவ்வாறு வி.வி.இ.ஆர்-1000 அணு உலைகளுடன் கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைக்கான உபகரணங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன’ என்றார். என்ஆர்சி குர்ச்சடோவ் நிறுவனத்து டன் இணைந்து உருவாக்கப்பட்ட இதேபோன்ற உபகரணங்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது மற்றும் 2ஆவது அணு உலைகளில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இது எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.