தரமான அரசுப் பள்ளிகளுக்கு கேடயம்: தொடக்கக்கல்வி இயக்குநர்
சென்னை, ஏப்.24- தொடக்கக்கல்வி இயக்குநர் க.அறி வொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி களை கல்விப் பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டு தோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளி களை தேர்வு செய்து, மாவட்ட வாரி யாக சுழற்கேடயங்கள் வழங்கப்படு கின்றன. அந்த வகையில், 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 114 பள்ளி களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2022-23 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் இக்குழுவினர் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சி, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட 15 பிரிவுகளில் தலா 10 மதிப்பெண் என 150 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும். இதில் 135 முதல் 150 வரை, 112 முதல் 135 வரை, 112-க்கு கீழ் என 3 பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்கி, சிறந்த 3 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இப்பணிகளை துரிதமாக முடித்து, பரிந்துரை பட்டியலை வரும் ஏப்.26 ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லிங்குசாமியின் சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு
சென்னை,ஏப்.24- திரைப்பட இயக்குநர் லிங்கு சாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் நிறுத்திவைத்தது. காசோலை மோசடி வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை முதன்மை நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் அதை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு திங்களன்று (ஏப்.24) விசார ணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். காசோலை தொகையில் 20 விழுக் காட்டை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் வைப்பு தொகையாக (டெபாசிட்) செலுத்த வேண்டும் என்றும் அதற்காக 6 வாரங்கள் அவகாசம் அளிப்பதாகவும் அவர் தனது உத்தர வில் தெரிவித்தார். இதற்கு லிங்குசாமி தரப்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஏற்கனவே 20 விழுக்காடு தொகையை செலுத்தியுள்ளோம். மேலும் செலுத்தத் தயார் எனத் தெரிவிக்கப் பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1.3 கோடி கடன் பெற்றிருந்தது. இந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல், தொடர்ந்து படம் எடுத்ததையடுத்து, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறு வனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
12 மணிநேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு!
சென்னை,ஏப்.24- தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரத்திற்கும் கூடுதலாக வேலை செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங் கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வற்றில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா பேரவை யில் கடந்த 21 ஆம் தேதி கொண்டு வரப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதாவின்படி, தொழிற்சாலைகள் சட்டத்தில் ஆறு முக்கியப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, வேலை நேரத்தை வாரத்துக்கு 48 மணி நேரம் என்பதை மாற்றியமைப்பது, தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து அதிகமாக்குவது போன்ற சட்டப் பிரிவுகளில் மாற்றங்களைக் கொண்டுவர வழிவகை செய்யப் பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத் துக்கு தொழிற்சங்கங்களும் தங்க ளது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. இந்த சட்டத் திருத்த மசோதா வுக்கு சிபிஎம்,சிபிஐ, திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள், தமிழர் வாழ்வுரிமை கட்சி மற்றும் பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெரும் கூச்சல் குழப்பத் திற்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சி களும் விடுதலை சிறுத்தைகளும் வெளிநடப்பு செய்தன. இந்நிலையில், சட்டப்பேரவை செயலகத்திலிருந்து தொழிலாளர் திருத்த மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் அடுத்தகட்ட நடவடிக் கைக்காக சட்டத்துறைக்கு அனுப் பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பு வதற்கு முன்னதாக திரும்பப் பெறும் அதிகாரம் அரசுக்கு உள்ள நிலையில், தொழிற்சங்கங்க ளுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.