கோயம்புத்தூர், அக். 14 - சிஐடியு மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஏபிடி பார்சல் நிறுவன தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. கோவையை தலைமையிடமாகக் கொண்ட ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி, என்ஐஏ குரூப் நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. இதில் 1200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ளது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களிடையே நடைபெற்று வந்தது. மூன்று சுற்றுகள் நடைபெற்றது. இதில், நிர்வாகத்தின் தரப்பில் நிர்வாக இயக்குநர், முதன்மை மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுப்ரமணியன், உதவிப் பொது மேலாளர் சண்முகநாதன், முதுநிலை மேலா ளர் நாராயணன் மற்றும் துணை மேலாளர் பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்கத்தின் தரப்பில் சிஐடியு ஏபிடி தொழிலாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் எஸ்.ஆறுமுகம், தலைவர் எம். அருணாசலம், பொதுச்செயலாளர் ஆர். ஆறுமுகம், பொருளாளர் கே.செவந்தி யப்பன் உள்ளிட்டோரும், ஐஎன்டியுசி ஏபிடி தொழிலாளர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் கே.என் சண்முகசுந்தரம், பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஏபிடி நிறுவனத்தில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு பத்து சதவீதம் போனஸ் வழங்குவதென பேசி முடிக்கப் பட்டது. மேலும், போனஸ் தொகையை வருகிற 20 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.