‘கார்பன் நியூட்ரல் - டெல்டா மாவட்டங் கள்’ என்ற திட்டம் விரைவில் துவங்கப்பட்டு, 2041 ஆம் ஆண்டுக்குள்ளாக கார்பன் சமநிலை அடைகிற வகையில் செயல்படுத்த உள்ளோம் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் தெரிவித்தார். தஞ்சாவூரில் ஞாயிற்றுக் கிழமை தனியார் மருத்துவ மனையில் நடந்த பசுமை மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: தமிழக முதல்வர் பசுமை தமிழ கம் திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தி வருகிறார். தமிழகத்தின் வன பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்துவது என்ற இலக்கில் ஆண்டுக்கு 10 கோடி மரங்கள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கட லூர், புதுக்கோட்டையை உள்ள டக்கிய பகுதிகளில், ‘கார்பன் நியூட்ரல் (கார்பன் இல்லா) டெல்டா மாவட்டங்கள்’ என்ற இலக்கை நோக்கி புதிய திட்டத்தை செயல் படுத்த உள்ளோம். இதனுடைய முக்கிய நோக் கம், டெல்டா மண்டலத்தில் நச்சுத் தன்மை தரக் கூடிய எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை. எனவே, விவசாயம் சார்ந்த பகுதி, வனப்பரப்பு அதிகம் நிறைந்த பகு தியாக இருப்பதால் ‘கார்பன் நியூட்ரல் டெல்டா மாவட்டங்கள்’ என்ற திட்டம் விரைவில் துவங் கப்பட்டு, இப்பகுதி முழுவதும் 2041 ஆம் ஆண்டுக்குள்ளாக கார் பன் சமநிலை அடைகின்ற வகை யில் செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித் தார்.