states

img

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது வழக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறையினரை தாக்கியதாக 3 லெப்டினன்ட் கர்னல் உள்பட 16 ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நுழைந்து காவல் அதிகாரிகள் மற்றும் கான்ஸ்டபிள்களை தாக்கியதாக  அங்கித் சூட், ராஜீவ் சவுகான் மற்றும் நிகில் ஆகிய 3 லெப்டினன்ட் கர்னல் உள்பட 16 ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆள் கடத்தல் (Section 365), அரசு அதிகாரிகள் கடமையை செய்யும்போது அவர்களை காயப்படுத்துதல் (Section 332), கொலை முயற்சி (Section 307), அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் (Section 186) ஆகிய பிரிவுகளில் கீழ் ராணுவ வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.