states

img

ஜம்முகாஷ்மீர்  மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்:  87 இடங்களில் குப்கார் கூட்டணி முன்னிலை

ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 87 இடங்களில் குப்கார் கூட்டணி முன்னிலையில் உள்ளது. 

மோடி அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் எதேச்சதிகார போக்குடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்தது பறிக்கப்பட்டது. 
மேலும் ஜம்மு காஷ்மீர் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர்  280 இடங்களுக்கான மாவட்ட வளர்ச்சி கவுன் சில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  2181 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.  இந்நிலையில் நவம்பர் 28ல் இருந்து டிசம்பர் 19 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 7மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, சிபிஎம் உள்பட மொத்தம் 7 கட்சிகள் இணைந்து குப்கார் கூட்டணியாக போட்டியிட்டது. பாஜகவும், காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட்டன.
இந்த தேர்தலில் தற்போதைய நிலவரப்படி குப்கார் கூட்டணி 87 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 46 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 
 

;