states

img

கிராமப்புற தொழிலாளர் ஊதியத்தில் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கிலும் அதிகம் கேரளம் முதலிடம்

கொச்சி, டிச. 2- கேரளாவில் கிராமப்புறங்களில் உள்ள  தொழிலாளர்கள் நாட்டிலேயே அதிக ஊதியம் பெறுகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கேரளாவின் கிராமப்புறங்களில் உள்ள ஆண்கள் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள். விவசாயம் அல்லாத துறையில், கேரளா வில் ஒரு கிராமப்புற தொழிலாளியின் தினசரி ஊதியம் 677.6 ஆக உள்ளது. தேசிய அளவில் அது 315.3 மட்டுமே. நாட்டி லேயே மிகப்பெரிய தொழில்துறை மாநில மான மகாராஷ்டிராவில் தினக்கூலி ரூ.262.3  மட்டுமே, குஜராத்தில் ரூ.239.6 மட்டுமே. கேரளாவைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் சராசரி தினசரி  ஊதியம் ரூ.483 ஆகவும், தமிழகத்தில் ரூ.449.5 ஆகவும் உள்ளது.

கிராமப்புற விவசாயத் தொழி லாளர்களின் ஊதியத்திலும் கேரளா முத லிடத்தில் உள்ளது. கேரளாவில், விவ சாயத் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் 706.5 ஆகவும், தேசிய சராசரி ரூ.309.9 ஆக வும் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் ரூ.501.1 ஆகவும், தமிழ்நாடு ரூ.432.2 ஆகவும் உள்ளது. இந்திய ரிசர்வ்  வங்கியின் கூற்றுப்படி, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் குஜராத்தில் ஒரு நாளைக்கு ரூ.213.1, மகாராஸ்டிராவில் ரூ.267.7, பஞ்சாபில் ரூ.357, ஹரியானாவில் ரூ.384.8 சம்பாதித்துள்ளனர். கட்டுமானத் துறையிலும், கிராமப்புற தொழிலாளர்களின் ஊதியத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் கட்டு மானத் துறையில் பணியாற்றும் தொழி லாளர்கள் தினக்கூலியாக ரூ.829.7 பெறு கின்றனர். இந்த வகையில் தேசிய சராசரி ரூ.362.2 மட்டுமே. தமிழகத்தில் தினக்கூலி ரூ.468.3 ஆகவும், மகாராஷ்டிராவில் ரூ.347.9 ஆகவும் உள்ளது. நாட்டின் ஏழ்மை குறைவான மாநிலமாக கேரளாவை இருதினங்களுக்கு முன்ப நிதி ஆணையம் (நீதி ஆயோக்) தேர்வு செய்தது. நிலையான வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான மாநில விருதை கேரளா தொடர்ந்து வென்றுள்ளது.

;