states

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் இ.கே.நாயனார் பிறந்தநாள்...

1919ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சென்னை மாகாணப் பகுதியாக இருந்த கண்ணூர் கயாசேரியில் பிறந்தவர் இ.கே. நாயனார்.இந்திய விடுதலைப் போராட்டத்தில்தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நடத்திய நீண்ட பயணம் இவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆக்கியது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கொலை வழக்கில் இவரது பெயர் பதிவு செய்யப்பட்டது. தேடப்படும் குற்றவாளியாக இருந்தபொழுது மலபாரிலிருந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தை நோக்கிய இன்றைய தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வந்தார். ‘கேரளா கௌமுதி’ பத்திரிகை ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். குமரி மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் நாயனாரின் பாதம் பதிந்திருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த இ.கே.நாயனார் கட்சி பிளவுபட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாவட்டச் செயலாளர், தேசாபிமானி பத்திரிகை ஆசிரியர், பின்னர் கட்சியின் மாநிலச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், மாநில முதலமைச்சர் என பல பொறுப்புகளில் பரிணமித்தார்‌ இ.கே. நாயனார். மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார் இ.கே. நாயனார். மொத்தம் 11 ஆண்டுகளில் நான்காயிரத்து ஒன்பது நாட்கள் கேரள மாநில முதல்வராகப் பதவி வகித்துள்ளார் இ.கே. நாயனார். இவர் 2004 ஆம் ஆண்டு மே மாதம் பத்தொன்பதாம் நாள் மறைந்தார்.

==பெரணமல்லூர் சேகரன்==

;