states

img

கேரளாவில் உணவுப் பூங்கா அமைக்க முதல்வரிடம் யுஏஇ அமைச்சர் உறுதி

திருவனந்தபுரம், டிச.19- கேரளத்தில் மாபெரும் உணவுப் பூங்கா தொடங்கு வதாக ஐக்கிய அரபு அமீர கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் கே.எஸ்.தானி முகம்மது அல் சோயுதி, முதல்வர் பினராயி விஜயனுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். இந்தியாவில் மூன்று உணவுப் பூங்காக்களை திறக்க ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் அரசு திட்டமிட்டுள் ளது. அவற்றில் ஒன்று கேர ளத்தில் இருக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டு கோள் விடுத்தார். டாக்டர். தானி அகமது ஒப்புக்கொ ண்டு, தொழில்நுட்பக் குழுவு டன் விவரங்களைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினார். கேரளத்தில் ஏழைகளுக்கு வீடுகட்டித்தரும் லைஃப் திட்டத்தின் கீழ், துபாய் ரெட் கிரசென்ட் நிறுவனம் வீட்டு வளாகம் கட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. செஞ் சிலுவைச் சங்கம் தொடர்பில் திட்டத்தை நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும் என தானி அகமது தெளிவுபடுத்தி னார். துபாய் எக்ஸ்போவில் பங்கேற்குமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பில் தானி முகமது அழைப்பு விடுத்தார். 2022 பிப்ரவரியில் நடக்கும் கண் காட்சியில் கலந்து கொள்வ தாக முதல்வர் அவரிடம் தெரி வித்தார். இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் டாக்டர். அகமது அப்துல் ரஹ் மான் அல் பன்னா மற்றும் லூலூ குழுமத்தின் தலைவர் டாக்டர். எம்.ஏ.யூசுபலியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஐக்கிய அரபு அமீரக அமைச்சரும் தூதரும் திருவனந்தபுரத்தில் லூலூ குழுமத்தின் வணிக வளா கத்தை திறந்து வைக்க வந்திருந்தனர்.

;