அறிவியலை வெறும் தொழில்நுட்பமாக மாற்றி மூலதனமும் அறிஞர்கள்,
அறிவின் மையைப் போதிப்பவர்களாக மாறுகி றார்கள். அறிவியல் வெறும் தொழில்நுட்பமாக மாற்ற ப்படுகிறது. அறிவியலையும் தர்க்கவியலையும் சிறப்பாக பிரச்சாரம் செய்பவர்களாகக் காட்டிக் கொண்டவர்கள் இன்று வலதுசாரி மற்றும் வகுப்புவாதத்தின் அணிவரி சையில் உள்ளனர். இல்லாத கட்டுக்கதைகளை அறிவின் பாகமாக்குவது அறிவையே முற்றாக மறைக்கிறது. அறி வியலின் கருத்துக்கு வர லாற்று வேர்கள் உள்ளன. சமூக மற்றும் வரலாற்றுப் பூர்வமானது அறிவியல்.
பாசிச எரிவாயு அறை யின் சிறிய வடிவத்தை முசாஃபர் நகரில் உள்ள ஒரு வகுப்பறையில், இஸ்லாமிய மாணவரை அடிக்குமாறு சக இந்து மாணவருக்கு ஆசி ரியை கட்டளையிடுவதன் வாயிலாகப் பார்த்தோம். இதற்கு எதிர்வினையாற்றக் கூட முடியாமல் திகிலடை ந்த ஒரு தந்தையைப் பார்த் தோம். இத்தகைய செயல் களுக்கு எதிரான நீதி உணர் வின் வெளிப்பாடே அறி வியல். மூலதன மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக நடந்து வரும் மாபெரும் போராட்டத்தின் பெயரும் அறிவியல் விழிப் புணர்வு ஆகும். நிலவில் ஒரு தனித்துவமான சாதனை யை நிகழ்த்திய நான்கு நாடு களின் பட்டியலில் இந்திய நாடு உயருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு முசாபர்புர் அவலநிலை நடந்துள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார சக்தியாக நாடு மாறியுள்ளது என்று பிரதமரே கூறும்போது, பட்டினி குறியீட்டில் நாடு 107ஆவது இடத்தில் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். மனி தர்களுக்கு சுய அதிகாரம் செய்யும் திறன் உள்ளது என்ற பார்வையில் காந்திஜி நவீன ஆட்சி முறையை எதிர்த்தார்.
சமத்துவம் என்ற கருத்து மனிதகுலத்தின் அடித்தளம். சமத்துவ உணர்வை வலி யுறுத்தும் முயற்சியாகவே மனிதநேயம் முன்னிலை ப்படுத்தப்பட்டது. மனிதா பிமான சமூகம் எப்போதும் வகுப்பு வாதத்திற்கு எதிராக நிற்க முயற்சிக்கும்.வகுப்புவாத சக்திகளும் மட்டுப்படுத்த முயல்கின்றன.
கேரள மாநிலம் அடூரில் சுதந்திர சிந்தனையாளர் களின் குழுவான தி ரேஷனல்ஸ் சயின்ஸ் ஃபோரம் நடத்திய விரிவுரைத் தொடரை தொடங்கி வைத்து ஆற்றிய உரையில் இருந்து...