states

img

மலம்புழா (பொது) பஞ்சாயத்து தலைவராக 23 வயது பழங்குடியின பெண் ராதிகா தேர்வு.....

மலம்புழா:
கேரளத்தின் சிறந்த சுற் றுலா தலமான மலம்புழா நீர்தேக்கத்தை உள்ளடக்கிய கிராம பஞ்சாயத்தின் (பொது) தலைவராக பழங்குடியினத்தைச் சேரந்த ராதிகா தேர்வு செய்யப்பட்டார்.

பாலக்காடு மாவட்டம் மலம்புழா எலகுத்தம்பாறா பழங்குடி காலனியைச் சேர்ந்த சாந்தா - மாதவனின் மகள் ராதிகா (23). பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வார்டு உறுப்பினராக போட்டியிட வைத்துவெற்றி பெறச் செய்தது. புதனன்று நடந்த கிராம பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலிலும் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

வலியக்காடு பள்ளி, ஆனக்கல் பழங்குடியினர் பள்ளி, அகத்தேதறா என்எஸ்எஸ் பள்ளிகளில் படித்தார். அரசு விக்டோரியா கல்லூரியில் பி.ஏ. முடித்தார். தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ.இரண்டாம் ஆண்டு மலையாளம் படித்து வருகிறார். பழங்குடி காலனியின் குழந்தைகளுக்கு இலவச கல்வியும் வழங்கி வருகிறார்.என் தந்தையும் தாயும் கூலி வேலை செய்பவர்கள். ஒரு சகோதரர் உள்ளார். பஞ்சாயத்து உறுப்பினர் வேட்பாளராக நிறுத்த சிபிஎம்முடிவு செய்தபோது, பலகோணங்களில் தடுக்கும் முயற்சி நடந்தது. “இது எதுவுமே பெண் குழந்தைகளுக்கு நல்லதல்ல, திருமணம் செய்து கொள்ளுங் கள்” என்று கூறி தன்னைத் தடுக்க முயன்றவர்களுக்கு தனது பஞ்சாயத்து தலைவர் பதவி ஒரு வலுவான பதில் என்று ராதிகா கூறினார். நம் பகத்தன்மையை பாதுகாத்து கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்துவதோடு பஞ்சாயத்து நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வேன் என்று ராதிகா கூறினார்.

;