states

img

மக்கள் நாயகர் இ.கே.நாயனாருக்கு 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி

கண்ணூர், மே 20- கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜனநாயகன் என போற்றப்படும் இ.கே.நாயனாரின் 20  ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுடன் அனுஷ்டிக் கப்பட்டது.

கண்ணூர் பையாம்பலத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் எம்.வி.கோவிந்தன் மலர் வளை யம் வைத்து நினைவஞ்சலி செலுத்தி னார். மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி, அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.வி.ஜெயராஜன், மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜன், டாக்டர். வி.சிவதாசன் எம்.பி. கே.வி.சுமேஷ் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.பி.திவ்யா, நாயனாரின் மகன்கள் வினோத்குமார், கிருஷ்ணகுமார், உஷா மற்றும் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கண்ணூர் பர்ணச்சேரி நாயனார்  அகாடமியில் நடைபெற்ற நினை வேந்தல் கூட்டத்தை எம்.வி.கோவிந்தன் தொடங்கி வைத்தார். பி.கே.ஸ்ரீமதி தலைமை வகித்தார். எம்.வி.ஜெயராஜன் வரவேற்றார். நாயனார் அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. நாயனார் அகாடமியில் எம்.வி.கோவிந்தன் கொடியேற்றினார். சொந்த ஊரான கல்யாச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை எம்.வி.கோவிந்தன் தொடங்கி வைத்தார். டி.சந்திரன் தலைமை வகித்தார். திருவனந்தபுரம் ஏகேஜி மையத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் கொடி ஏற்றினார்.

;