states

img

எல்டிஎப்-பின் நேர்மை, யுடிஎப்-பின் பொய்மையைச் சொல்லும் தேர்தல் அறிக்கைகள்.....

திருவனந்தபுரம்:
உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் எல்டிஎப் மற்றும் யுடிஎப் அறிக்கை களுக்கு என்ன வித்தியாசம்? முதல் பார்வையிலேயே அவற்றில் நேர்மைக்கும் நேர்மையின்மைக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணலாம்.நவ கேரள கட்டுமானத்திற்கான விரிவானநோக்கத்தை எல்டிஎப் தேர்தல் அறிக்கையாக வெளிப்படுத்தியபோது, ஊழலுக்குஎதிராக ஒரு ஓட்டு என்கிற முழக்கத்தைக்கூட கைவிட்ட யுடிஎப்பால் பெயருக்கு ஒரு துண்டறிக்கையாக மட்டுமே வெளியிட முடிந்துள்ளது. ஓய்வூதியத்தை அதிகரிப்பது, எத்தனை வேலைகள் வழங்கப்படும், எத்தனை வீடுகள் வழங்கப்படும் என்பது குறித்து எந்த விவாதத்தையும் யுடிஎப் முன்வைக்க வில்லை. அறிக்கை முழுவதும் எல்.டி.எப் அரசாங்கத்தைப் பற்றிய பொய்களே நிரம்பியுள்ளன. அதோடு, கேரளாவில் உள்ள ஏழைகளுக்கு நிழல் தரும் லைப் உட்படநான்கு பெரிய திட்டங்களை அகற்று வதற்கான சவால்களே உள்ளன.

அதே நேரத்தில், எல்.டி.எப் இந்தபணிகளை விரிவுபடுத்துவதாக உறுதியளிக்கிறது. சமூகநல ஓய்வூதியத்தை ரூ.600 லிருந்து ரூ.1400 ஆக உயர்த்தியுள்ளது, மேலும் அதை ரூ.1500 ஆக உயர்த்தும். ஏற்கெனவே இரண்டரை லட்சம் மக்களுக்கு வீட்டுவசதி வழங்கியதைப் போலவே வீடுகளின் எண்ணிக்கையை ஐந்து லட்சமாக உயர்த்தும். பத்து லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் போன்ற வாக்குறுதி கள் எல்.டி.எப் அறிக்கையில் உள்ளன.அதே நேரத்தில், பாஜகவின் வகுப்புவாதம் மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோதகொள்கைகள் குறித்து கடும் விமர்சனங்கள் எல்டிஎப் அறிக்கையில் உள்ளன. ஆனால் யுடிஎப் பாஜக என்ற வார்த்தையை கூட குறிப்பிடவில்லை.

;