திருவனந்தபுரம், செப்.17- ஆளுநர் ஆரிப் முகமது கான் முட்டாள்தனமாக பேசுகிறார் என்றும், அவர் அமர்ந்திருக்கும் பதவிக்கேற்ப செய்திகளை சொல்ல வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். ஆளுநர் பதவி எதையாவது கூச்சலிடும் மையமாகிவிட்டதா? நிர்வாகச் செயல்பாட்டிற்கு ஒதுக்கப் பட்ட ஒவ்வொரு பதவிக்கும் அரசமைப் பால் வரையறுக்கப்பட்ட பொறுப்புக ளும் அதிகாரங்களும் உள்ளன. அதற்கு நாங்கள் குறுக்கே நிற்கவில்லை. கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க அரசமைப்பு முறையிலான வழிகள் உள்ளன. எந்த ஒரு விசயத்தையும் ஊடகங்க ளுக்கு முன்னால் சொல்லும் திறன் கொண்டவர் போல ஆளுநர் பதில் சொல்கிறார். அவ்வாறே காரியங்க ளைச் செய்ய முடியுமானால், அது அர சமைப்புச் சட்டம் வகுத்துள்ள முறை யல்ல என்பதை நினைவூட்ட வேண்டும். ஆளுநருக்கு என்ன நடந்தது என்பதை அவர் அல்லது அவரது கூட்டாளி கள் சரிபார்க்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி ஒட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார் என்று ஆளுநர் கேட்கிறார். அவர்களால் ராஜ்பவனுக்குச் சென்று போஸ்டர் ஒட்ட முடியாது. ஒவ்வொரு நிறுவனத்துடன் தொடர்புடையவர்க ளால் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. வேலை செய்யும் இடம் மற்றும் படிக்கும் இடம் தவிர வேறு எங்கும் இது நடத்தப்படும். பல்கலைக்கழ கத்தில் அமைப்புகளின் நடவடிக்கை களை தடை செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? அதை தடுக்கலாம் என எண்ணுவது முதிர்ச்சியடைந்த செயல்பாடு அல்ல என்று முதல்வர் கூறினார்.