states

img

கிஃப்பி நிதி ரூ.1 கோடியில் தமிழ்ப் பள்ளி

திருவனந்தபுரம், மே 25- திருவனந்தபுரத்தில் தமிழர்கள் அதிக மாக வசிக்கும் சாலை என்னும் பகுதியில் அறுபது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட,   தமிழ் மேல்நிலைப் பள்ளிக்கு கேரள அடிப்  படை கட்டமைப்பு முதலீட்டு வாரிய (கிஃப்பி)  நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம்  கட்டப்பட்டுள்ளது.   இந்த கட்டிடத்தை, ஆன்லைன் மூலம் முதல்வர் பினராயி விஜயன் செவ்வாயன்று (மே 23) திறந்து வைத்தார். பள்ளியில் நடை பெற்ற விழாவில் அமைச்சர் அந்தோணி ராஜு பெயர் பலகையை திறந்து வைத்தார். மேயர் ஆர்யா ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ் மொழி ஆர்வலர் சு.க.கணபதியப்ப பிள்ளை 1960இல் ஆர்யசாலை அருகே வாடகைக் கட்டிடத்தில் “செந்தமிழ்ப் பாட சாலை”யைத் தொடங்கினார். திருவனந்த புரத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு அவர் களின் தாய்மொழியில் கல்வி வழங்குவதே நோக்கமாக இருந்தது. செந்தமிழ்ப் பாட சாலையின் செயல்பாடுகளைக் கேட்டறிந்த எம்.எஸ்.ரெட்டியார், வாடகைக் கட்டடத்தில் இருந்த பள்ளியை, செந்திட்டையில் உள்ள சொந்தக் கட்டடத்துக்கு மாற்றினார். பின்னர், செந்தமிழ்ப் பாடசாலையை அரசு தமிழ்ப்பள்ளியாக அங்கீகரித்து, கேரள கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. டி.முத்தையாப்பிள்ளை, அருணா சலம்பிள்ளை, சிவன்பிள்ளை, கிருஷ்ணன் பிள்ளை, சுப்பையாபிள்ளை ஆகியோர் நிலத்தை தானமாக வழங்கினர்.. 1965 இல் பத்தாம் வகுப்பும், 1996 இல் ஆசிரியர் பயிற்சியும் (டிடிசி), 1999 இல் விஎச்எஸ்இ மற்றும் 2000 இல் மேல்நிலைப் பள்ளியாக வும் செயல்படத் தொடங்கியது. கேரளத்தின் பல மாவட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் இருந்தாலும், பள்ளியின் பெயருடன் ‘தமிழ்’ என்ற சொல்லைப் பயன்  படுத்தும் ஒரே அரசுப் பள்ளி. தமிழ் மேல் நிலைப் பள்ளி சாலா என்பதாகும்.

;