சந்திரயான்- 3 வெற்றியைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ண மிகாவு பத்ரகாளி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள் ளார். அப்போது, செய்தியாளர்களி டம் கூறியதாவது:
“நான் ஒரு ஆய் வாளர். நான் நிலவை ஆராய்கிறேன். மன தையும் ஆராய்கி றேன். அறிவியல் மற்றும் ஆன் மீகம் இரண்டையும் ஆராய்வதற்கான எனது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி இது. அதனால் நான் பல கோவில்களுக்கு செல்கிறேன். பல வேத நூல்களையும் படிப்பேன்.
இந்த பிரபஞ்சத்தில் நமது இருப்பு மற்றும் நமது பயணத்தின் அர்த்தத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன். இது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். எனவே, என்னுடைய புறத்துக்காக நான் அறிவியலை ஆய்வு செய்கிறேன். அகத் திற்காக கோயில்களுக்கு வருகிறேன்.
நிலவில், சந்திரயான்- 3லிருந்து விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத் திற்கு ‘சிவசக்தி’ என்று பெயரிடுவது தொடர்பாக எந்த சர்ச்சையும் இல்லை என்றும், அந்த இடத்திற்கு பெயரிட தேசத்திற்கு உரிமை உண்டு.
பிரதமர் நரேந்திர மோடி சிவசக்தி என்ற பெயருக்கான அர்த்தத்தை நம் அனை வருக்கும் பொருந்தும் வகையில் கூறி னார். அதில், தவறில்லை என்று நினைக்கி றேன். மேலும் அவர் மூவர்ண கொடிக்கு இன்னொரு பெயரைக் கொடுத்தார். இரண்டும் இந்தியப் பெயர்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதில், நமக்கு ஒரு தனித்து வம் இருக்க வேண்டும். நாட்டின் பிரதமர் என்ற வகையில், பெயரிடும் தனிச்சிறப்பு அவருக்கு உள்ளது”.