200 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தோள் சீலைப் போராட்டமானது, சமூகத்தில் நிலவிய அநீதி களுக்கு எதிராகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் இத்தனை ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிற எண்ணற்ற போராட்டங்களின் துவக்கம் ஆகும். அன் றைக்கு இருந்த தெற்கு திருவிதாங்கூர் பிராந்தி யத்தில் மக்களின் சமூக நிலைமைகளை மேம்படுத்தி யதில் இந்தப் போராட்டம் என்றென்றும் அழிக்க முடி யாத - நிலைத்து நிற்கிற பங்கினை ஆற்றியிருக்கிறது.
அந்த மகத்தான போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு கொண்டாட்டமானது, இன்றைக்கு நம்மைச் சுற்றி நடக்கிற உரிமைகள் மறுப்பு மற்றும் அநீதிகளுக்கு எதி ரான போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருக்கும். இந்தப் பின்னணியில், தோள் சீலை போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாகர்கோவி லில் மிகப் பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடை கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். நமது வர லாற்றை மீண்டும் எண்ணிப் பார்ப்பதும், புதுப்பித்துக் கொள்வதும் நமக்கு மேலும் உற்சாகத்தையும், ஊக் கத்தையும் அளிக்கும்; இன்றைய நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதற்கான உத் வேகத்தையும் ஒளிமயமான எதிர்காலத்தை கட்ட மைக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அளிக்கும்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
பினராயி விஜயன்