states

img

கேரள சபாநாயகராக ஏ.என்.ஷம்சீர் : முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து

திருவனந்தபுரம், செப்.12- கேரள சட்டப்பேரவையின் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் பேணி, ஜனநாயக வரலாற்றில், சபையின் செயல்பாடுகளை மரபுவழியாக மாற்றும் அளவிற்கு, சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர், சபையை உயர்த்துவார் என, முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார். சபாநாயகராக இருந்த எம்.பி.ராஜேஷ் அமைச்ச ரானதைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை வாழ்த்திப் பேசிய முதல்வர், நாடாளு மன்ற நிர்வாகத்தில் புதிய முன்மாதிரிகளை உருவாக்க வும், மக்களின் அவசரத் தேவைகள் சட்டமன்றத்தில் பிரதிபலிப்பதை உறுதி செய்யவும், இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் சட்டங்களை உருவாக்க உந்து சக்தியாக சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் இருக்க முடியும் என்றார். ஏ.என்.ஷம்சீருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், எதிர்கட்சிகளுக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறை வாக இருந்தாலும் உரிய வாய்ப்பு வழங்கப்படுவதை சபாநாயகர் உறுதி செய்வார் என்கிற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

96 வாக்குகள்

முன்னதாக கேரள சட்டப் பேரவையின் 24ஆவது சபாநாயகராக இடது ஜனநாயக முன்னணியின் ஏ.என். ஷம்சீர் 96 வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தாக துணை சபாநாயகர் சித்தயம் கோபகுமார் அறி வித்தார். யூடிஎப் வேட்பாளர் அன்வர் சதாத் 40 வாக்கு கள் பெற்றார். முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனும் இணைந்து புதிய சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைத்தனர். துணை சபாநாயகர் உடனிருந்தார்.
 

;