states

img

நாட்டிலேயே முதல் முறையாக கேரளப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுப் பாடம்

திருவனந்தபுரம், மே 31 புதிய கல்வியாண்டில் கேரளத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் நான்கு லட்ச த்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் செயற்கை நுண்ணறிவுப் படிப்பைப் படிப்பார்கள். மனித முக பாவனை களை வெளிப்படுத்தும் வகையில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஐசிடி) பாடப்புத்தகத்தில், “கணினிப் பார்வை” என்ற அத்தியாயம் புதி தாக சேர்க்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு நிரலைத் தயாரிப்பதற் கான ஒரு வழியாக இப்பாடம் வடி வமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக பள்ளிகளில் ஒரு வகுப்பில் உள்ள அனைவரும் செய ற்கை நுண்ணறிவை (AI) பற்றி கற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இம்முறை 1, 3, 5, 7 ஆகிய வகுப்பு களுக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலும் புதிய ஐசிடி (ICT) புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. புரோகிராமிங், ஏஐ, ரோபோடிக்ஸ் போன்றவற்றை பயிற்சி செய்ய “Picto Blocks” தொகுப்பு பாடப்புத்தகத்தில் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மடிக்கணினிகளில் தேவையான அனைத்து மென்பொருள்களையும் கேரள உட்கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்ப (Kite) நிறுவனம் வழங்கும். ஒன்று மற்றும் மூன்றாம் வகுப்பு களுக்கான பாடப்புத்தகத்தில் Gcobris, EduActivate, Omnitex மற்றும் Tuxpaint போன்ற இலவச மென்பொருள் அடிப்படையிலான பயன்பாடுகள் உள்ளன.

இவை வரை தல், படித்தல், எழுத்தறிவு மற்றும் எண்ணியல் ஆகியவற்றை உள்ளடக்கி யது. போக்குவரத்து விதிகள், கழிவு மேலாண்மை போன்றவற்றை கேம்கள் மூலம் அறிமுகப்படுத்த டிராஃபிக் சிக்னல் மற்றும் வேஸ்ட் சேலஞ்ச் ஆப்ஸையும் கைட் கொண்டுள்ளது.

இணையப் பாதுகாப்பு, போலிச்  செய்திகளைக் கண்டறிதல் போன்ற வற்றுக்கு வழிகாட்டும் வகையில் புதிய புத்தகங்கள் தயார் செய்யப் பட்டுள்ளதாக ஐசிடி பாடநூல் குழுத் தலைவரும், கைட் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே.அன்வர் சதாத் தெரிவித்தார். அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஜூன் மாதம் முதல் பாடப்புத்தகம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இது வரை 20,120 ஆசிரியர்கள் ஏஐ பயிற்சி யை முடித்துள்ளனர். அடுத்த ஆண்டு,  2, 4, 6, 8, 9 மற்றும் 10 ஆகிய வகுப்பு களுக்கு புதிய ஐசிடி பாடப்புத்த கங்கள் கிடைக்கும்.

;