states

img

மாநிலங்கள் தமது பொருளாதாரத்தை உயர்த்த ஒன்றிய அரசு உதவிட வேண்டும்

திருவனந்தபுரம், செப்.4- கோவிட் பெருந்தொற்று நோயின் தாக்  கத்தை சமாளிக்க மாநிலங்கள் பொருளாதா ரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசு  தீவிரமாக தலையிட வேண்டும் என்று கேரள  முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண் டுள்ளார். கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்  கொள்ளும் முக்கிய பிரச்சனைகளான கட லோர அரிப்பு, ரயில்வே, விமான நிலைய சீர மைப்பு போன்றவற்றில் ஒன்றிய அரசு சிறப்பு  கவனம் செலுத்த வேண்டும் என்றார் முதல்வர். திருவனந்தபுரம் கோவளத்தில் நடை பெற்ற 30ஆவது தென்மாநிலங்களின் கவுன்சில் கூட்டத்தில் கேரள முதல்வர் பேசுகையில், குறிப்பிட்ட அம்சங்கள் வருமாறு:

நாடாளுமன்றம் சமஷ்டிப் பட்டியலின் அடிப்படையில் சட்டம் இயற்றும் முன் பய னுள்ள விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றார். இது சம்பந்தமாக கருத்து வேறுபாடு கள் இருக்கலாம். ஆனால் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் கருத்து வேறுபாடு களைக் குறைத்து ஒருமித்த கருத்தை எட்ட முடி யும். ஆரோக்கியமான கூட்டாட்சி ஜனநாயகத் தின் சாராம்சம் இதுதான். அரசமைப்புச் சட்டம்  ஒன்றிய மற்றும் மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரங்களை தெளிவாக வரையறுக்கிறது. ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் பிரச்சனைகளையும் தீர்க்க அரசியல் சட்டத்  தில் தெளிவான விதிகள் உள்ளன. 1956 ஆம்  ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அரசமைப்  பின் 263 ஆவது பிரிவின்படி இக்கவுன்சில்கள் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது என்றா லும் ஒரு அறிவிப்பின் மூலம் செயல்படுத்த 40 ஆண்டுகள் ஆனது.

கூட்டுறவு கூட்டாட்சியை வளர்ப்பதில் மாநி லங்களுக்கு இடையிலான கவுன்சில்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் முதல்வர் கூறி னார். பிரச்சனைகளுக்கும் விவாதங்களுக்கும் தீர்வு காண்பது இதன் முக்கிய செயல்பாடா கும். ஜனநாயகத்தின் அனைத்து நிலைகளுக்கு மான தேர்தல்கள் மக்களால் நடக்கிறது.  அரசின் ஒவ்வொரு அமைப்புக்கும் அதன் சொந்த அதி கார வரம்பு உள்ளது. இவற்றுக்கிடையே எழ  வாய்ப்புள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய பரஸ்பர ஒத்துழைப்பும், கலந்துரை யாடலும் உதவும். கலாச்சார, மத, மொழி வேறு பாடுகள் இருந்தாலும் நமது ஒற்றுமையின் விளைவு இது. ஒவ்வொரு மாநிலத்தின் வெற்றிக்  கதைகளையும் வெவ்வேறு அனுபவங்களை யும் பகிர்ந்து கொள்வதும் கற்றுக்கொள்வதும் மற்ற மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றை வடிவமைப்பதும் அவசியம். கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட முன்  னெப்போதும் இல்லாத சூழ்நிலையை ஒத்து ழைப்பு மனப்பான்மையுடன் எதிர்கொண் டோம்.

வேற்றுமைகளை மறந்து, மக்களின் பாதுகாப்பே காலத்தின் தேவை என அனை வரும் உணர்ந்தனர். கோவிட் பெருந்தொற்று நோயின் தாக்கத்தை சமாளிக்க ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி அதிகாரம் முக்கியமானது. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.  தலச்சேரி-மைசூர், நிலம்பூர்-நஞ்சன்கோடு ரயில்பாதை மேம்பாடு தொடர்பாக கர்நாடக முதல்வருடன் சிறப்பு ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூட்டத்தில் முதல்வர் தெரி வித்தார். கோவளத்தில் உள்ள ராவிஸ் ஓட்டலில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திரப் பிரதேச நிதி அமைச்சர் பாக்ரா  ராஜேந்திரநாத், தெலுங்கானா உள்துறை அமைச்சர் முஹம்மது மஹ்மூத், புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் பட்டேல், அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி.கே. ஜோஷி, ஒன்றிய அரசு மற் றும் தென்னிந்திய மாநிலங்களின் மூத்த அதி காரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

;