திருவனந்தபுரம், நவ.23- கேரளாத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக சிஏஜி, இடி, சிபிஐ, என்ஐஏ அமைப் புகள் பெரும் சதியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஆதாரம் தான் இப்போது வெளிவந்துள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (இடி) இந்த வாட்ஸ் அப் செய்தி என்று ஊடகங்களிடம் சுட்டிக்காட்டி நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார். சிஏஜி அறிக்கை இன்னும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதை ஆராய சட்டமன்றத்திற்கான விதி உள்ளது. பொது கணக்குக் குழு அதை ஆய்வு செய்யும். அறிக் கையும் நடவடிக்கையும் அதன் அடிப்படை யில் இருக்கும்.
அதற்கு மாறாக சிஏஜி அறிக் கையை பொதுவெளியில் விவாதத்துக்கு உட்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக கொடுத்துள்ள உரிமை மீறல் நோட்டீ சும் உள்ளது. அதற்கு விளக்கம் கோரப்பட்டுள் ளது. இந்த சூழ்நிலையில்தான் சபையில் சமர்ப்பிக்கப்படாத சிஏஜி அறிக்கை குறித்து இடி இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது. பொது கணக்குக் குழுவின் (பிஏசி) அறிக் கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாறாக இப்போது இடியே நடவடிக்கை எடுத்துள்ளது. இது சட்ட மன்றத்தை அவமதிப்பதாகும். இது சட்ட மன்றத்தின் உரிமைகளை மீறுவதாகும். கேரள சட்டமன்றத்தின் அனைத்து அதிகா ரங்களுக்கும் விதிகளுக்கும் இடி-யால் சவால் விடுக்க முடியும் என்று கருத வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவர் அமைதியாக இருக் கிறார். அரசை கவிழ்க்க உங்களிடையே ஏதே னும் ஏற்பாடு உள்ளதா?.
அதனால்தானோ இந்த மவுனம். நிதி அமைச்சர் உரிமை மீறல் நடத்தியதாக எத்தனை முறை செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். ரிசர்வ் வங்கியை நான் சவாலுக்கு அழைக்கவில்லை. இது குறித்து சிஏஜி என்ன கூறியது என்றும் நான் சொல்ல வில்லை. இடி எடுத்த இந்த நடவடிக்கை குறித்து சென்னித்தலா ஏன் அமைதியாக இருக்கி றார்? நிலைமை தீவிரமானது.சிஏஜியும் இ.டி-யும் மாநில அரசை கவிழ்க்க சதி செய் கின்றன. அதில், இ.டி-யே ஊடகங்களுக்கு முழு விஷயமும் வாட்ஸ்அப் செய்தி வழி யாக கசிய விட்டதுடன், தலைப்பு உட்பட எப்படி இருக்க வேண்டும் என்ற ஆலோசனை யையும் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது.
மாநில அதிகாரத்தின் மீது சவாரி செய்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொல்கிறார்?. என்று கேட்ட அமைச்சர் இ.டி அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியையும் ஊடகங்களுக்குக் காட்டி னார். இ.டி-யின் ரேடாரில் கிப்பியும் வந்துள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள பள்ளிகள், சாலைகள் மற்றும் கட்டிடங்களின் வளர்ச்சியை நாசப்படுத்த ஒரு பெரிய சதி நடந்து வருவதை மக்கள் உணர வேண்டும்” என்று அவர் கூறினார்.