states

img

கேரளத்திற்கு எதிராக களமிறங்கிய மத்திய ஏஜென்சிகள்; பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் ஏன் பேசவில்லை? முதல்வர் பினராயி விஜயன் கேள்வி

திருவனந்தபுரம்:
எம்எல்ஏக்களை வாங்குவதன் மூலம் கேரள அரசை கவிழ்க்க முடியாது என்பதை அறிந்த மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களில் அரசியல் சூழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும் புலனாய்வு அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் ஏன் அதற்கு ஆதரவாக நிற்கின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கேரள உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக இடதுஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) ஏற்பாடு செய்த வலைப் பேரணியை அவர் தொடங்கி வைத்து மேலும் பேசியதாவது: 

கேரளாவில் எல்டிஎப் ஆட்சி தொடரும் என்ற தொலைக்காட்சி கணக்கெடுப்பும் அடுத்தடுத்த செய்திகளும் திட்டமிடப்பட்ட ஒரு ஏற்பாட்டின் பகுதியாகும். ஒரு வருடம் கழித்து நடக்கும் தேர்தல்கள் குறித்து வழக்கமான கணக்கெடுப்பு இல்லை அது. கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு தெளிவான நோக்கம் இருந்தது. அதன்படி பிறகு, கேரளாவில் திட்டமிட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.கேரளாவின் அரசியல் சூழ்நிலையை சீர்குலைக்க யுடிஎப்பும் பாஜகவும் ஒன்றுபட்டன. கேரளம்  இந்தியாவிலும் உலகத்தின் பார்வையிலும் எல்டிஎப் அரசு பெருமைகளை அடைந்த காலம் அது. நான்கு ஆண்டு காலப்பகுதியில், இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புகார் அல்லது குற்றச்சாட்டு கூட எழுப்பப்படவில்லை. எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டு மட்டுமே இருந்தது. ஊழல் இல்லாத அரசு என்ற பெருமையையும் பெற்றது.

இதை உடைக்க மாநிலத்தில் ஒரு அசுத்தமான கூட்டணி ஏற்பட்டது. இடதுசாரிகளை எந்த வகையிலும் நசுக்க வேண்டும் என்று நினைக்கும் பாஜக, யுடிஎப் மற்றும் வலதுசாரி ஊடகங்கள் ஒன்றிணைந்துள்ளன. கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் அதற்கு  ஆதரவாக இணைந்தார். பல்வேறு மத்திய நிறுவனங்கள் இந்த தூய்மையற்ற கூட்டணியின் நலன்களைப் பாதுகாக்க அபத்தமான முறையில் செயல்பட்டு வருகின்றன.

கேரளத்தில் பாஜக - காங்கிரஸ் உறவு
கேரள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் யுடிஎப் மற்றும் பாஜக இடையே ரகசியமாகவும் வெளிப்படையாகவும் புரிதல் உள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இரு குழுக்களும் பொதுவான சுயேச்சை வேட்பாளர்களை பரவலாக போட்டியிட வைத்துள்ளன. யுடிஎப், ஜமாத்-இ-இஸ்லாமியுடன் வெளிப்படையான உறவுகளை ஏற்படுத்தியது. மதச்சார்பின்மையின் ஒரு பகுதியாக இருக்கும் கேரளாவில் முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஒரு பகுதியை வாக்குகளுக்கு அணிதிரட்டுகின்ற லீக் மற்றும் காங்கிரசுக்கு எதிரான உணர்வு நிச்சயம் தலைதூக்கும். ஒரு யுடிஎப் தலைவர் கூட பாஜகவை விமர்சிக்கவில்லை. அவர்கள் அத்தனை பெரிய இணைப்பில் உள்ளனர்.

கேரள எதிர்க்கட்சி எப்போதுமே அரசாங்கத்திற்கு எதிராக எழுப்பிய கேள்வி என்னவென்றால், இந்த அரசாங்கம் நாட்டிற்காக என்ன செய்திருக்கிறது என்பது தான். இதுபோன்ற கேள்வியை யுடிஎப், பாஜக அல்லது வலதுசாரி ஊடகங்கள் இப்போது மட்டுமே எழுப்பவில்லை. கோவிட் காலத்தில் கேரளம், நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு முன்மாதிரியாக மாறியது, கருவூலம் நிரம்பியதால் அல்ல, மாறாக அது ஏழைகளோடும் சாதாரண மக்ககளோடும் காட்டிய அன்பு நிறைந்திருந்ததால் தான்.
யுடிஎப் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. எல்டிஎப்-பின் மக்கள் செல்வாக்குத் தளம் விரிவடைகிறது. இந்தத் தேர்தல் எல்டிஎப்-க்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இந்தத் தேர்தலுடன், ஜமாத்-இ-இஸ்லாமியுடனான அதன் பணியில் முஸ்லிம் லீக் பின்னடைவை சந்திக்கும் என்றும் பினராயி கூறினார்.