குஜராத்தை சேர்ந்த உயிரிழந்த ராணுவ வீரருக்கான பதக்கம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்முகாஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் குஜராத்தை சேர்ந்த ராணுவ வீரர் கோபால் சிங் உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு வீர தீர செயல்களுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தபாலில் அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த கோபால் சிங்கின் குடும்பத்தினர் பதக்கத்தை வாங்க மறுத்துள்ளனர். மேலும் இது அவமானப்படுத்தும் செயல் என்று ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.