வெள்ளி, பிப்ரவரி 26, 2021

states

img

குஜராத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு லாரி மோதி விபத்து-15பேர் பலி

குஜராத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறிய விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்குலாரி ஏறியதால் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ராஜஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது  ஏறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 
 

;