வெள்ளி, பிப்ரவரி 26, 2021

states

img

கர்நாடகா: வெடி மருந்து லாரி வெடித்து விபத்து - 8 பேர் பலி

கர்நாடகாவில் வெடிமருந்துடன் சென்று கொண்டிருந்த லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடக மாநிலம் சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி உள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரிக்கு ஒரு லாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரி ரயில்வே கிரசர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியது. 
இந்த வெடிவிபத்தால் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததோடு கட்டங்கள் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 
இந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;