states

img

ஓடிசாவில் மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால், ஒடிசாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஒடிசா மாநிலத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) இரவுக்குள் ஆழ்கடலில் இருந்து மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையிலிருந்து 45 முதல் 55 கி,மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்கங்கிரி, கோராபுட், கஜபதி, கஞ்சம், ராயகடா, காந்தமால், நபரங்பூர், கலஹண்டி, நாயகர், குர்தா மற்றும் பூரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்து வரும் மூன்று நாட்களில் ஒடிசாவின் பல மாவட்டங்களில் 70 முதல் 200 மில்லி மீட்டர் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது வானிலை ஆய்வு மையம்

;